புத்தாண்டை முன்னிட்டு சென்னையின் போக்குவரத்து மாற்றம்!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Dec 30, 2019, 06:22 PM IST
புத்தாண்டை முன்னிட்டு சென்னையின் போக்குவரத்து மாற்றம்! title=

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2019 முடிவடைந்து, புதிய ஆண்டான 2020 வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரவுள்ளது. 2020 ஆண்டை வரவேற்க உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பல இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

மெரினா கடற்கரையில் கூடுபவர்கள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, பலூன்கள் பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். அதேசமயம் சிலர் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 

இதனிடையே புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, வாலாஜா சாலை, காந்தி சிலை, அடையார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் அன்மை செய்தி, சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN தொலைக்காட்சியை பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News