சென்னை: கடத்தல் செய்திகள் தினந்தோறும் கேள்விப்படும் சாதாரணமான விஷயமாகிவிட்டது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
அரசும், காவல்துறையும் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், கடத்தல்கள் என்பது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் நடைபெறுவது அண்மைக் காலத்தில் அதிகமாகிவிட்டது.
அதிலும், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக துபாயில் இருந்து வரும் விமானப் பயணிகள் தங்கம் கடத்துவது தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டிருக்கும்போதே, தொடர்ந்து தங்கக் கடத்தல் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகின்றன.
Also Read | 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடலட்டை கடத்தல் தடுப்பு
அண்மையில் கிடைத்த செய்திகளின்படி, துபாயில் இருந்து திரும்பிய பயணிகள் கொண்டு வரும் பொருட்களில் தங்கத்தை மறைத்துக் கொண்டு வருகின்றனர். நேற்று (புதன்கிழமை, அக்டோபர் 20) மாலை, கேஜெட்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட 5.06 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் 5 பேரை கைது செய்தனர்.
கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், துபாயில் இருந்து திரும்பிய EK-544 மற்றும் UL-121 விமானங்களில் சென்னை வந்த 10 பயணிகளை விமான சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தடுத்து வைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதில், மடிக்கணினிகள், டேப்லெட் கணினிகளில் மறைத்து வைக்கப்பட்ட தங்கத் தகடுகள் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.
தங்கத்தை கடத்த பயன்படுத்தப்பட்ட பொருட்களின் புகைப்படங்களையும் சுங்கத் துறை அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். மடிக்கணினி விசைப்பலகையின் கீழ் மற்றும் டேப்லெட் கம்ப்யூட்டர்களின் டிஸ்ப்ளேவின் கீழ் மெல்லிய தங்கப் படலங்களை எப்படி மறைத்து கொண்டு வந்தனர் என்பதை காட்டுகிறது.
மொத்தம் 2.19 கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 5.06 கிலோ அளவிலான 24 காரட் தங்கம் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. மேலும், 48.6 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களும் சுங்கச் சட்டம், 1962 -ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read | 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மலக்குடலில் வைத்து கடத்தல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR