கோமியம் குடிக்க வைத்து சித்திரவதை: கணவருக்கு 7 ஆண்டு சிறை!

வரதட்சணை கேட்டும், குழந்தை பாக்கியத்திற்காக கோமியத்தை குடிக்கவைத்தும் சித்ரவதை செய்ததால் பெண் மருத்துவர் 2014ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 11, 2022, 11:23 AM IST
  • குழந்தை பாக்கியத்திற்காக கோமியத்தை குடிக்கவைத்து சித்ரவதை.
  • இருவரையும் மீண்டும் சிறையில் அடைக்க அயனாவரம் காவல்துறைக்கு உத்தரவு.
  • கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
கோமியம் குடிக்க வைத்து சித்திரவதை: கணவருக்கு 7 ஆண்டு சிறை! title=

வரதட்சணை கேட்டும், குழந்தை பாக்கியத்திற்காக கோமியத்தை குடிக்கவைத்தும் சித்ரவதை செய்ததால் பெண் மருத்துவர் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகால சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

மேலும் படிக்க | மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.!

அயனாவரம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் அமலியை துன்புறுத்தியுள்ளனர். 2007ம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த அமலி, பிரசவத்துக்குப் பின் கணவர் வீடு திரும்பியபோது, அவரை வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தியதுடன், அவரது பெயரில் உள்ள சொத்துகளை எழுதி வைக்க சொல்லியும் துன்புறுத்தி தாக்கி, சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அமலி, கடந்த 2014 நவம்பர் 5ம் தேதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள், தந்தை ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை,  தற்கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அயனாவரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, மருத்துவர் அமலியின் கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மாமனார் ஜான் பிரிக்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.

madurai high court

இந்த தீர்ப்பை எதிர்த்து மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஏற்கனவே இரு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தை இல்லை என்பதற்காக வீட்டில் பூஜைகளை நடத்தி, அமலியை கோமியம் குடிக்க வற்புறுத்தியுள்ளதாகவும், அனைத்து ஆதாரங்களையும் போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆதாரங்களில் இருந்து டாக்டர் தற்கொலைக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று கருதுவதால் அவரது தற்கொலைக்கு காரணமான மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்வதாக கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் படிக்க | எங்களது Audi கார்களை ஒப்படைக்கவும்: பப்ஜி மதனின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News