சென்னை: வியாழக்கிழமை அதிகாலை பெய்த மழைக்குப் பிறகு, நகரத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் மீண்டும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. ஆனால் வானிலை ஆர்வலர்கள், நவம்பர் 3 ஆம் தேதி வரை சென்னையில் வறண்ட வானிலையே காணக்கூடும் என்றும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் லேசான மழை இருக்கலாம் என கூறியுள்ளனர்.
நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு, பருவமழையின் (Monsoon) வேகம் மீண்டும் அதிகரிக்கும் என்றும் அப்போது நகரில் மிண்டும் பரவலான நல்ல மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளி இல்லாமல் சென்னையிலும், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களிலும் பரவலான தொடர் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை, நுங்கம்பாக்கத்தில் 13.34 செ.மீ மழை பெய்தது. இது அக்டோபர் 18, 2014 அன்று பதிவான 16.19 செ.மீ மழைக்குப் பிறகு, இங்கு அக்டோபர் மாதத்தில் பெய்துள்ள அதிகபட்ச 24 மணி நேர மழை அளவாகும்.
அடுத்த 24 மணிநேரங்களுக்கு, இடைப்பட்ட இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. சில பகுதிகளில் மிதமான மழை மற்றும் அதிக மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
ALSO READ: சென்னையில் பலத்த மழை: பல இடங்களில் நீர் தேக்கம், வீடுகளுக்குள் நீர் புகுந்தது!!
வடக்கு தமிழக கடற்கரையில், வங்காள விரிகுடாவின் தென்மெற்கில் உருவான சூறாவளி சுழற்சி காரணமாக வியாழக்கிழமை சென்னையில் கடுமையான மழை பெய்தது. இந்த சுழற்சி இப்போதும் வட தமிழகம் மற்றும் தென் ஆந்திர பிரதேசத்தின் மேல் உள்ளது.
வியாழக்கிழமை பெய்த மழைக்குப் பிறகு, நுங்கம்பாக்கம் நிலையத்தில் அக்டோபரில் 6.5 செ.மீ அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் இங்கு 31.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 96.2% பற்றாக்குறை உள்ளது. இந்த மாதத்தில் இங்கு 15.5 செ.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
நவம்பர் மாதத்தில் அதிக மழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆர்வலர்கள் தெரிவித்தனர். வானிலை பதிவர் பிரதீப் ஜான் கூறுகையில், கிழக்கிலிருந்து வரும் காற்று சுழற்சியும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்தமும் நகரத்திற்கு வழக்கமான அதிகாலை மழையை கொண்டு வரக்கூடும் என்றார். தற்போதைய சூறாவளி சுழற்சி வெளியேறக்கூடும். நவம்பர் 3 அல்லது 4 ஆம் தேதிகளில் எற்படும் மாற்றத்தால் சில நாட்களுக்கு தினமும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எப்படியும் அடுத்த 2-3 நாட்களுக்கு மழையின் தாக்கம் சிறிது குறையக்கூடும் என்றும் நவம்பர் 2-3 தேதிகளில் மீண்டும் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நவம்பர் மாதத்தில் பரவலாக பல நாட்களுக்குத் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் வியாழனன்று பெய்த பேய் மழையால் ஒரு புறம் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், மறுபுறம் இதற்கு முன்னர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அச்சமும் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்தது. வீடுகளில் மழை நீர் புகும் அளவிற்கு மழை பெய்ததால் இந்த அச்சம் இன்னும் அதிகமாகியது. எனினும், அப்படிப்பட்ட அபாயத்திற்கான எச்சரிக்கை எதையும் இதுவரை IMD வெளியிடவில்லை.
ALSO READ: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது: வானிலை ஆய்வு மையம்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR