பேருந்து கட்டண உயர்வு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jan 22, 2018, 02:02 PM IST
பேருந்து கட்டண உயர்வு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!! title=

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டண உயர்வு கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது. அமலுக்கு வந்த நாளன்று மட்டுமே சுமார் ரூ.8 கோடி வசூலாகியுள்ளது.

இந்தக் கட்டண உயர்வால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் பொதுமக்கள் இந்த கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன.

இந்நிலையில் முன் அறிவிப்பின்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் இந்த மனுவை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அப்போது மனுவை அவசர வழக்காக விசரிக்க மறுத்த நீதிபதி சுப்பையா, மனுவை வழக்காக தாக்கல் செய்தால் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று கூறியுள்ளார்.

பொதுவாக பொது நல மனுக்கள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் விசாரிக்கப்படுவது வழக்கம் என்றாலும், இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணக்கு ஏற்கப்படும் என்று கூறப்படுகிறது.

Trending News