நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்: மத்திய அரசு திட்டவட்டம்

கல்விக் கொள்கையின் படி, நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 19, 2020, 05:16 PM IST
  • புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்.
  • மூன்றாவது மொழியாக எதைக் கற்பிக்க வேண்டும் மற்றும் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அந்தந்த மாநில அரசு மற்றும் மாணவர்களின் முடிவு.
  • தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கை தான் தொடரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை: EPS
நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்: மத்திய அரசு  திட்டவட்டம் title=

New Delhi: மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் (National Education Policy 2020) அடிப்படையில் இந்தியாவில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. அதாவது இன்று நாடாளுமன்றத்தில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் (Thamizhachi Thangapandian), தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சகம், புதிய கல்விக் கொள்கையின் படி, நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையே ( 3-Language Policy)  பின்பற்றப்படும். அதேநேரத்தில் மூன்றாவது மொழியாக எதைக் கற்பிக்க வேண்டும் மற்றும் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அந்தந்த மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு. ஒருபோதும் எந்தவொரு  மொழியும் திணிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

முன்னதாக, அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை (NEP 2020) கொண்டுவந்துள்ளது. இதில் குறிப்பாக மும்மொழி கல்வியை வலியுறுத்தப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. 

ALSO READ | 

அதனையடுத்து, தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கை தான் தொடரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என தெளிவாகத் தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கக்ம் அளித்துள்ளார். ஆனாலும் மத்திய அரசு மும்மொழிக் கொள்கை (Trilingualism Formula ) கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது.

அதேபோல,  திமுக தலைவரும் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் (MK Stalin), சட்டமன்றத்தில் பேசும் போது, தமிழகத்தில் இருமொழி கொள்கை (2 Language Policy) தான் பின்பற்றப்படும் என தமிழக அரசு (TN Govt) கூறியதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு நாங்கள் (திமுக கூட்டணி) தயாராக இருக்கிறோம். இது குறித்து முதல்வர் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி உள்ளார். 

ALSO READ | 

அதற்கு அதிமுக அரசு (AIADMK Govt) தரப்பில் பேசிய தமிழக முதல்வர் (Edappadi K. Palaniswami), புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதை எதிர்காலத்தில் தமிழக அரசு சிந்திக்கும் என விளக்கம் அளித்தார்.

Trending News