பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வந்தார். அவரை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது மதுபோதையில் இருந்த சில பாஜகவினர், அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பாஜகவினரை பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க | பொங்கி எழுந்த சின்மயிக்கு நியாயம் கிடைத்தது! டெலிவரி ஆளின் வாலை சுருட்டிய போலீஸ்
இந்த தகவலை அறிந்த பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் பல்லாவரம் காவல்நிலையத்தை முற்றுக்கையிட்டனர். அப்போது, சிறுவர்களை கைது செய்ததற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசாரணை என்ற பெயரில் அவர்களை தாக்கியதாகவும் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீர பாண்டியனையும் பாஜகவினர் சுற்றி வளைத்தனர். அவரிடமும் பாஜகவை சேர்ந்த சிறுவர்களை காவல்துறையினர் தாக்கியது குறித்து விளக்கம் கேட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த துணை ஆணையர் அதிவீர பாண்டியன், காவல் நிலையத்தில் இருக்கும் அனைத்து காவல்துறையினரும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டார். மேலும், தானே விசாரணை நடத்திக் கொள்வதாக கூறிய அவர், பின்னர் பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களையும் விடுவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதி காவல்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் படிக்க | கோவையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ