WATCH: காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த H.ராஜா....!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எச்.ராஜா காவல்துறையினரை கடுமையாக திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2018, 10:13 AM IST
WATCH: காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த H.ராஜா....!  title=

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எச்.ராஜா காவல்துறையினரை கடுமையாக திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...!  

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே  உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டபோது, குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா, காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரின் தடையையும் மீறி, ஹெச்.ராஜா தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஊர்வலம் சென்றனர். 

அந்த வீடியோ பதிவில் அவர் கூறியுள்ளதாவது., போலீஸ் மொத்தமும் கரப்ட் (ஊழல்). போலீஸோட ஈரல் 100 சதவிகிதம் அழுகி போச்சு. நான் இங்க இருக்குற இந்து வீடு வழியா போறேன். முடிஞ்சா தடுத்து பாரு. ஹைகோர்ட்டாவது.. (####). இன்னைக்கு புழல் சிறையில யாரை கைது பண்ணி இருக்காங்க சொல்லுங்க. நீ இந்துவை டார்ச்சர் பண்ணுற. நீ இந்துவா?. போலீஸ் மொத்தமாக ஊழல் செஞ்சு இருக்கு. 

உங்களுக்கு வெட்கமா இல்லை. டிஜிபி வீட்டுல ரெய்டு நடக்குது. இந்துக்கள் என்ன அனாதையா, இந்த நாட்டுல. கிறிஸ்துவர், முஸ்லிம்கள் கிட்ட லஞ்சம் வாங்குறீங்களே நான் தரேன் லஞ்சம். வாங்குங்க. நான் ஸ்டேஜ் போடுவதை தடுக்க நீ யார். நான் போட்டுதான் பேசுவேன்.

போலீஸ் மொத்தமாக ஊழல் செஞ்சு இருக்கு. உங்களுக்கு வெட்கமா இல்லை. டிஜிபி வீட்டுல ரெய்டு நடக்குது. இந்துக்கள் என்ன அனாதையா, இந்த நாட்டுல. கிறிஸ்துவர், முஸ்லிம்கள் கிட்ட லஞ்சம் வாங்குறீங்களே நான் தரேன் லஞ்சம். வாங்குங்க. நான் ஸ்டேஜ் போடுவதை தடுக்க நீ யார். நான் போட்டுதான் பேசுவேன். 

இவர் பேச பேச போலீஸ் அவரிடம் சமாதானம் மட்டுமே செய்தது. எச்.ராஜா அங்கிருக்கும் மக்களை தூண்டிவிடும் விதமாக பேசியுள்ளார். ஆனால் போலீஸ் எதுவும் செய்யாமல் மிகவும் அமைதியாக அவர் பேசுவதை தலையாட்டி கேட்டுக்கொண்டு இருந்துள்ளது. இதில் போலீஸ் அவரிடம் தொடர்ந்து கெஞ்சுவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Trending News