விழுப்புரத்தில் தனியார் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கு காரணமான தனியார் பேருந்து அங்கிருந்த சிலரால் அடித்து நொறுக்கப்பட்டது.
ஆத்திர மிகுதியால் மக்கள் அந்த தனியார் பேருந்துக்கு தீ வைத்தனர். எனினும், விரைந்து வந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
நடந்தது என்ன?
விழுப்புரத்தில், விழுப்புரம் புதுவை நெடுஞ்சாலையில் பானாம் பட்டு சாலை பிரியும் சந்திப்பில், புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பாண்டி ரோடுவேஸ் ( தனியார்) பேருந்து, ஒரு ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் (Road Accident), 25 வயதான ஆட்டோ ஓட்டுநர் அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தனியார் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அவர்களில் ஒருவர் திடீரென பேருந்தின் மையப்பகுதி உள்ளே தீ வைத்தார்.
ALSO READ: சாலை விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்ப்போருக்கு 5000 பரிசு!
பேருந்தின் சீட்டு பகுதி எரிந்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக சுதாகரித்த போலீசார் தீயை (Fire) அணைத்து பேருந்தை மீட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு தனியார் பேருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, அரை மணி நேரம் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு திரண்டு கூடியிருந்தோரை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கியது. தொடர்ந்து புதுவையில் இருந்து விழுப்புரம் வரக்கூடிய தனியார் பேருந்துகள் அதிவேகமாக வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த விபத்து மற்றும் பேருந்துக்கு தீ வைத்த விபத்து குறித்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் (TN Police) விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ALSO READ:கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகள் - பிச்சை எடுக்கும் வயதான தம்பதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR