கடலுக்குள் சென்ற ஏழு மீனவர்களைக் காணவில்லை! கடல் சீற்றத்துக்கு மத்தியில் தேடுதல் பணி!

கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 4000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் செவ்வாய் காலை, தொடர்ந்து கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Last Updated : Aug 5, 2020, 01:20 PM IST
    1. ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களைக் காணவில்லை.
    2. கடலின் சூழலும் அலைகளின் சீற்றமும் மீன் பிடிக்க சாதகமாக இல்லை.
    3. செவ்வாய்க்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை இரவு 11.30 மணி வரை
    4. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை.
கடலுக்குள் சென்ற ஏழு மீனவர்களைக் காணவில்லை! கடல் சீற்றத்துக்கு மத்தியில் தேடுதல் பணி! title=

கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 4000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் செவ்வாய் காலை, தொடர்ந்து கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களைக் (Fishermen) காணவில்லை. கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 4000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் செவ்வாய் காலை, தொடர்ந்து கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடலின் சூழலும் அலைகளின் சீற்றமும் மீன் பிடிக்க சாதகமாக இல்லாத நாட்களில் மீனவர்கள் அதிகாலையிலேயே கடலுக்குள் சென்று விடுவது வழக்கமாக கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு முறையாகும். ஆனால் இதை கடைபிடிக்காமல், திங்களன்று மதியம் சுமார் 622 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளில் (Machine Boats) கடலுக்குச் சென்றவர்களில் இப்போது காணாமல் போயிருக்கும் ஏழு மீனவர்களும் அடங்குவர் என்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

கடல் சீற்றம் அதிகமாகவும் கடுமையான காற்றும் இன்று அதிகாலையில் மீனவர்களைத் கரைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தியது. ஆனால் பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான படகில் இருந்த ஏழு மீனவர்கள் திரும்பி வரவில்லை என்று அவர் கூறினார்.

ALSO READ | மழை வருமா... வராதா.... என்ன சொல்லுது வானிலை ஆய்வு மையம்..!

இதற்கிடையில், காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்து மீட்க உதவுமாறு ராமநாதபுரம் எம்.பி. நவஸ்கனி கடற்படை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வானிலை காரணமாக தேடல் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு வங்காள விரிகுடாவின் மேற்கு வங்கக் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை இரவு 11.30 மணி வரை தெற்கு தமிழகக் கடற்கரையில் கோலாச்செல் முதல் தனுஷ்கோடி வரை 3.5 - 4.1 மீட்டர் உயரத்தில் அதிக அலைகள் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. 

Trending News