Weather: அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.. மக்களே எச்சரிக்கை!

North East Monsoon: தமிழகத்தில் அதிக மழை பெய்யும் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் 2 நாட்களில் வரலாம். பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும் என துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 20, 2023, 03:44 PM IST
  • இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.
  • தமிழ்நாடட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
  • சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.
Weather: அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.. மக்களே எச்சரிக்கை! title=

Tamil Nadu Weather Updates: நேற்று காலை (19-10-2023) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை (20-10-2023) 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும்  வலுவடைந்து 22-10-2023 மாலை தீவிர புயலாக  நிலவக்கூடும். இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10-2023 வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும். 

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆகிவை குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும்?

குமரிக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.

மேலும் படிக்க - மழை காலத்தில் துணிகள் காயவில்லையா? இந்த முறையை பின்பற்றுங்கள்! துர்நாற்றம் வராது!

இன்று தமிழ்நாட்டில் மழை நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் நாளை மழை நிலவரம்

தமிழக கடலோர மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும்,  தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்: இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல நாளை மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் படிக்க - ஆயுதபூஜையை முன்னிட்டு தாம்பரம், பூந்தமல்லியில் இருந்து அரசு பேருந்துகள்!

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

6 செ.மீமழை பெய்த இடங்கள்: குருந்தன்கோடு (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), கன்னியாகுமரி.

5 செ.மீ மழை பெய்த இடங்கள்: நாகர்கோயில் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி).

4 செ.மீ மழை பெய்த இடங்கள்: திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி).

3 செ.மீ மழை பெய்த இடங்கள்: குளச்சல் (கன்னியாகுமரி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்).

2 செ.மீ மழை பெய்த இடங்கள்: அடையாமடை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), குன்னூர் PTO (நீலகிரி), குழித்துறை (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி).

1 செ.மீ மழை பெய்த இடங்கள்: முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கொடவாசல் (திருவாரூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), களியல் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சுருளகோடு (கன்னியாகுமரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), நீடாமங்கலம் (திருவாரூர்), விழுப்புரம், பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி).

மேலும் படிக்க - கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமா? இத தெரிஞ்சுக்கிட்டு போங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News