அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்: டிசம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு

நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், கட்சி குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2021, 12:30 PM IST
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்: டிசம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு title=

அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், கட்சி குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கட்சியின் அடிப்படை தொண்டர்களே தேர்வு செய்வார்கள் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ALSO READ: OPS on Tamil New Year: தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றுவது நல்லது 
 
7 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுக்களை டிசம்பர் 3 முதல் 4 வரை தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி பகல் 11:25 முதல் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும் அதிமுக கட்சி தெரிவித்துள்ளது. 

இது குறித்து அதிமுக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், ‘அதிமுக கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதற்கு ஏற்ப ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு, டிசம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடக்கும். தேர்தலில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும். கட்சியின் மூத்த தலைவர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அகியோர் தேர்தல் ஆணையர்களாக இருப்பார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களாக அதிமுக-வுக்குள் உட்கட்சி பூசல்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம் - அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News