சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்த திருவண்ணாமலை வேன் டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்!

Intelligence Of Van Driver Avoided Big Loss: வைக்கோல் ஏற்றி வந்த மினி வேன் மீது மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த நிலையில், ஏரியில் வண்டியை ஓட்டி தீயை அணைத்த வேன் ஓட்டுநர்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 30, 2024, 10:36 PM IST
  • மோசமான விபத்தை தவிர்த்த வேன் ஓட்டுநரின் சாமர்த்தியம்...
  • திருவண்ணாமலை வட்டாரத்தில் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம்
  • தீப்பற்றி எரிந்த வைக்கோல் வேன்
சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்த திருவண்ணாமலை வேன் டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்! title=

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கோலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்த மினி வேன் மீது மின் கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட வேன் ஓட்டுநர் அரை கிலோமீட்டர் தூரம் ஓட்டி சென்று, ஏரி தண்ணீரில் வேனை இறக்கிவிட்டு, உயிர் தப்பினார்.

வண்டி தீப்பற்றி எரிந்த போதிலும், சமயோஜிதமாக செயல்பட்ட போதிலும், இப்படியொரு சம்பவம் நடைபெற்றது  அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கம் அடுத்த கோலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரை அறுவடை செய்திருந்தனர். அங்கிருந்து வைக்கோலை ஏற்றி செல்வதற்காக தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து வேன் ஓட்டுநர் வந்திருந்தார்.

மேலும் படிக்க | PVC ஆதார் அட்டை 5 நட்களில் வீடு வந்து சேரும்... விண்ணப்பிக்கும் முறை..!!

அவர் இன்று (மே 30, 2024) மாலை வைக்கோலை வேனில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, விவசாய நிலத்தின் அருகில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி உரசியது. இதில், வேனில் இருந்த வைக்கோல் தீ பற்றி எரிந்தது. வைக்கோல் ஏற்றி வந்த மினி வேன் மீது மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த நிலையில் ஏரியில் விட்டு அழித்த வேன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அங்கிருந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து உதவி செய்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் இறங்கிய வேனை அப்புறப்படுத்தினர்.

சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வைக்கோல் பற்றி எரிந்த நிலையில் வேனை சாமர்த்தியமாக ஓட்டிச் சென்றதால், பெரிய சேதாரம் தவிர்க்கப்பட்டது. ஓட்டுநர், வாகனத்தை ஏரி தண்ணீரில் இறங்கிய போது, எரிந்துக் கொண்டிருந்த வைக்கோலில் நீர்பட்டதால் வேன் பற்றி எரியாமல் காப்பாற்றப்பட்டது.  

மேலும் படிக்க | சீனியர் சிட்டிசன்களிடம் இருந்து அரசு அதிக வருமான வரி ஈட்டுகிறதா? தெளிவான விளக்கம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News