இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால்... எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - பொங்கும் ஓபிஎஸ் அணி

AIADMK Symbol Issue: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முழுக்க காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 17, 2024, 03:53 PM IST
  • சின்னம் விஷயத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் - புகழேந்தி
  • அங்கு அளிக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் விசாரணையில் உள்ளது - புகழேந்தி
  • ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நடக்கிறது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால்... எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - பொங்கும் ஓபிஎஸ் அணி title=

AIADMK Symbol Issue: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அஇஅதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி இன்று பத்திரிகையாளர் சந்தித்தார். அதில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு பழனிச்சாமி தான் முழுக்க காரணம் என்றும் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட வேண்டும், இல்லையென்றால் முடக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் முடிவு என்றும் பேசியிருந்தார். 

அவர் மேலும் கூறுகையில், "ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தேன். தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டிருந்த வழக்குகளின் அடிப்படையில் விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் இது குறித்து முடிவு எடுக்க முடியாது. தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு தெரிவித்துள்ளனர். இதுவே எங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதுகிறோம். 

ஒற்றுமையை விரும்பாத பழனிசாமி

பழனிச்சாமியும் சின்னம் குறித்து கேட்டுள்ளார், சின்னத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக ஒருநாள் நீதி கிடைத்த தீரும். அண்ணா திமுக முழுமையாக அழிக்கப்பட வேண்டும்  என எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக போக சொல்கிறார்கள் அதற்கு பழனிசாமி  ஒத்துழைக்கவில்லை. நாளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை எடப்பாடி பழனிசாமிதான் காரணம். 

மேலும் படிக்க | Nirmala Sitharaman: அரசு வெள்ள நிவாரணம் வழங்குவது பிச்சையா? நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு

அவரவர் சின்னத்தில் அவரவர் போட்டி இடுவார்கள். தாமரை சின்னத்தில் போட்டியிட நேர்ந்தால் தேர்தலை புறக்கணிப்போம் என ஓபிஎஸ் கூறுவதாக வரும் வெளியான தகவல்கள் புரளிதான். தேர்தல் விதிகளுக்கு முரண்பாடாக ஒருங்கிணைப்பாளர் சட்டத்தை திருத்தியது தவறு என கூறியுள்ளார்கள். உச்ச நீதிமன்றத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எதிராக பழனிசாமி நடந்து கொண்டிருக்கிறார். டெல்லி வழக்கறிஞர்கள் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சின்னம் கிடைக்காதபட்சத்தில்...

இருப்பினும் எங்களுக்கு சரியான தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் வழக்கு தொடர்வோம், நீதிமன்ற கருத்துபடி தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளோம். உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சின்னங்கள் குறித்து முடிவு எடுக்காது, தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். 

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சின்னம் முடக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய முடிவு. எடப்பாடி பழனிச்சாமி பொறுத்தவரையில் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்

இரட்டை இலை கிடைக்காதபட்சத்தில் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தில் கண்டிப்பாக போட்டியிடுவோம்" என்றார். மேலும், அவரிடம் கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னம் இருந்தது குறித்து கேட்டபோது பதிலளித்த அவர், "அது நியாயமான தேர்தலாக நடக்கவில்லை. அது குறித்தும் முதல் வழக்கில் பதிவு செய்துள்ளோம்" என்றார். 

முன்னதாக, தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். மக்களவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் ராதிகா சரத்குமார்? நாளை வெளியாகும் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News