அதிமுக - பாஜக கூட்டணி உறுதி: தமிழகத்தில் பாஜகவுக்கு 5 தொகுதி..

பாஜக - அதிமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதியானது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2019, 05:36 PM IST
அதிமுக - பாஜக கூட்டணி உறுதி: தமிழகத்தில் பாஜகவுக்கு 5 தொகுதி.. title=

வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமீத்ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அமீத்ஷா வரமாட்டார் எனக் கூறப்பட்டது. இதனால் கூட்டணி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட சில பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடத்தினர். 

இன்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 5 தொகுதியில் பாஜக போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளன. ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News