CAA-வுக்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்திற்குப் பிறகு, புதுச்சேரி சட்டமன்றம் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது!!

Last Updated : Feb 12, 2020, 01:02 PM IST
CAA-வுக்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..! title=

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்திற்குப் பிறகு, புதுச்சேரி சட்டமன்றம் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது!!

புதுச்சேரி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த தீர்மானம் சட்டப்பேரவையில் விவாதத்துக்கு பின் நிறைவேறியது. சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட்ட மாநிலங்களின் வரிசையில் புதுவையும் இணைந்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை திருக்குறள் வாசித்து சபாநாயகர் சிவகொழுந்து தொடங்கி வைத்தார். முதலாவதாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புருசோத்தமன் மற்றும் ராமநாதன் ஆகியோர் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடுகள் திரும்பப்பெற வேண்டும். காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளான் மண்டலமாக அறிவித்தல் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். இந்தியாவில் உள்ள தாழ்த்தப்படடோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்த வேண்டும். 70 வது இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் கொண்டாட்டம் ஆகிய 4 தீர்மானங்களை முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் முன்மொழிந்தார்.

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்திற்குப் பிறகு, புதுச்சேரி சட்டமன்றம் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய ஆளும் காங்கிரஸ் அரசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு புகார் கொடுக்கப்படும். மத கலவரத்தை தூண்டும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்றார். 

 

Trending News