இரட்டை தலைமை விவகாரம்: ADMK மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவக்கம்...!

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Last Updated : Jun 12, 2019, 10:46 AM IST
இரட்டை தலைமை விவகாரம்: ADMK மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவக்கம்...!  title=

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியிலும், சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட 22 இடங்களில் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கட்சியில் இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா முன்வைத்தார். இதையடுத்து, கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது.

இந்த சூழலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள், கட்சித் தலைமை குறித்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள், உள்ளாட்சித் தேர்தல்கள் என பல முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News