"ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தது" சிவக்குமாரின் கலைஞருடனான கடைசி சந்திப்பு

கலைஞரை கடைசியாக சந்தித்தது குறித்து நடிகர் சிவக்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 3, 2022, 05:15 PM IST
  • கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்
  • சிவக்குமாரின் கடைசி சந்திப்பு
  • "ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தது"
"ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தது" சிவக்குமாரின் கலைஞருடனான கடைசி சந்திப்பு title=

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகவின் நீண்டகால தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நடிகர் சிவக்குமார் அவருடனான கடைசி சந்திப்பை பகிர்ந்துள்ளார். " கலைஞர் நினைவு இழந்து படுக்கையில் இருந்த தருவாயில், நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது தமிழும், செல்வியும் என்னை கலைஞரிடம் அழைத்து சென்று “ சிவக்குமார் அண்ணன் வந்திருக்கார் பாருங்க” என்று கூறினார்கள்.

 

மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி - தமிழ்நாட்டுக்கு தலையெழுத்து எழுதிய தலைவன்!

அவர் முகம் எந்த வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. அப்போது, தமிழருவி மணியனுடைய  “ சிவாஜி எனும் தவப்புதல்வன்” புத்தகம் எழுந்தியிருந்தார். அதில் இடம்பெற்ற மனோகரா படத்தின் தர்பார் காட்சியை டிவி-யில்  போட்டு, அவர் அருகில் சத்தம் அதிகமாக வைத்து அவரை அதை கேட்க வைக்கலாம் என யோசித்தோம். 

அந்த காட்சியை போட, அதன் வசனம் “புருசோத்தமரே புரட்டு காலின் இருட்டு மொழியிலே “ என தொடங்கும் நீளமான அந்த உணர்ச்சிகரமான வசனத்தை 1.30 நிமிடம் போட்டோம். அவர் அருகே சென்று பார்த்தோம் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, நான் அருகில் சென்று பார்த்தேன்.. மூக்கு விடைக்கல.. உதடு துடிக்கல.. ஆனா.. கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவரை கடைசியா பார்த்தது..”, என கூறியுள்ளார் சிவகுமார்.

மேலும் படிக்க | கருணாநிதிக்கு "பாரத ரத்னா" விருது : வைரமுத்துவின் வாழ்த்துக் கவிதை.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News