நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாக அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றுள்ளது.
‘விறுவிறு’ கமல்!
விக்ரம் வசூல் வெற்றியால் இதனால் குஷி மோடில் இருந்துவரும் கமல்ஹாசன், வரிசையாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஏற்கெனவே கிடப்பில் போடப்பட்ட சில படங்களையும்கூட தூசு தட்டி எடுத்துவர கமல் ப்ளான் செய்துவருகிறாராம். அதேபோல, தனது ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பாக சில முக்கியமான படங்களையும் தயாரிக்கவுள்ளார் கமல். விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படமும்கூட இந்தப் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அரசியல் பணிகளையும் மீண்டும் முடுக்கிவிட்டுள்ளார் கமல். இது தொடர்பாக மண்டல அளவிலான ம.நீ.ம ஆலோசனைக் கூட்டங்களும் நடந்துவருகின்றன.
புதிய பிரச்சினை!
இந்நிலையில் கமல்ஹாசனுக்குப் புதிய சிக்கல் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. அதாவது, சென்னை ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அலுவலகமாக அது தற்போது செயல்பட்டு வருகிறது. படம் தொடர்பான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் இங்கேதான் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த நிறுவனத்துக்குத்தான் தற்போது பிரச்சினை கிளம்பியுள்ளதாம்.
என்ன காரணம்?
சென்னையில் 61 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 2ஆம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பாதையானது ஆழ்வார்பேட்டை வழியாகச் செல்கிறதாம். இதையடுத்து இப்பணிகளுக்காக அந்தப் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டின் 170 சதுர அடி நிலம் இதில் வருகிறதாம். இது தொடர்பாக மெட்ரோ நிறுவனம் சார்பில் கமலுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாம்.
அன்று விஜயகாந்த்!
கருணாநிதியின் திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருமண மண்பத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அந்த விவகாரம் அப்போது பரபரப்பாக மாறியது. திமுகவைக் கடுமையாக எதிர்த்து விஜயகாந்த் களம் கண்டதற்கு அந்தச் சம்பவம் மிக முக்கியமான ஒன்று எனப் பேசப்பட்டது.
என்ன முடிவு?
இந்நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது கமலுக்கு நேர்ந்துள்ளது. 170 சதுர அடி நிலம் அடிபட உள்ளதால், கமல் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்வாரா அல்லது இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டு மீதம் இருக்கிற இடத்தில் அலுவலகத்தை நடத்த முன்வருவாரா எனும் விஷயம் இனிமேல்தான் தெரியவரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR