மரத்தில் ஜாலியாக ஆட்டம் போட்ட கரடி - மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில், மரத்தின் மீது ஏறி விளையாடிய கரடியை கண்டு தேயிலைத் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 20, 2022, 04:29 PM IST
  • மரத்தில் விளையாடிய கரடி
  • வீடியோ எடுத்த தொழிலாளர்கள்
  • அதிகம் பகிரப்படும் வீடியோ
மரத்தில் ஜாலியாக ஆட்டம் போட்ட கரடி - மக்கள் பீதி title=

கோத்தகிரி அருகே  கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், மரம் ஒன்றின் மீது  கரடி ஒன்று ஏறி இறங்கி விளையாடி மகிழ்ந்தது. இதை கண்டு ஆச்சரியமும், பீதியும் அடைந்த தேயிலைப் பறிக்கும் பணியிலிருந்த சிலர்,  அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சிறிது நேரம் அங்கு விளையாடிய கரடி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சினிமாவின் முன்னோடி ராமராவ் காலமானார்

எனவே கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | பழைய நிலைக்கு வர வேண்டும் என்றால் விராட் கோலி ஓய்வு எடுக்க வேண்டும்: ரவி சாஸ்திரி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News