பெங்களூருவில் சாலை தடுப்பில் கார் மோதி பயங்கர விபத்து: 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் கோரமங்களா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஓசூர் எம்எல்ஏ மகன் உள்பட ஏழு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2021, 11:37 AM IST
பெங்களூருவில் சாலை தடுப்பில் கார் மோதி பயங்கர விபத்து: 7 பேர் உயிரிழப்பு title=

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா பகுதியில் நள்ளிரவில் கார் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த கார் விபத்தில் 7 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் என்பது முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

விபத்தின் காரணம் 
பெங்களூரு (Bengaluru) கோரமங்களா என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஆடிகார் ஒன்று அதிகவேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தில் பங்கரமாக மோதியது. இந்த காரில் பயணம் செய்த ஓசூர் திமுக (DMK MLA) எம்எல்ஏ பிரகாஷின் மகன் உட்பட 7 பேர் பயணம் செய்தனர். 

ALSO READ | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல முன்னணி இயக்குனரின் மகன்

 

 

 

 

இந்நிலையில் தற்போது இந்த, சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால் மொத்தம் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் கேரளாவை சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தவர் இரண்டு பேர் மற்றும் 3 பெண்களும் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இந்த காரை எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டியுள்ளார். மேலும் இவர் கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதி விபத்திற்குள்ளானது. 

தற்போது இந்த விபத்து தொட்பாக ஆடுகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | 'யாரப்பாத்து....?' என கூறி மாஸ்க் அணிய மறுத்த மருத்துவர்: வைரல் ஆன தரமான சம்பவம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News