அதிகமாக யோசிப்பதை நிறுத்த..ஜப்பானியர்கள் பின்பற்றும் ஸ்மார்ட் வழி!

Japanese Techniques To Stop Overthinking : நம்மில் பலர் அதிகமாக யோசிக்கும் பழக்கத்தினை கொண்டிருப்போம். இது நிறுத்த சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jan 11, 2025, 03:38 PM IST
  • அதிகம் யோசிப்பதை நிறுத்த டிப்ஸ்!
  • ஜப்பானியர்கள் பின்பற்றும் வழிமுறைகள்..
  • என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அதிகமாக யோசிப்பதை நிறுத்த..ஜப்பானியர்கள் பின்பற்றும் ஸ்மார்ட் வழி! title=

Japanese Techniques To Stop Overthinking : நம்மில் பலர் நிகழ்காலத்தில் இருக்கவே பல சமயங்களில் தவறிவிடுகிறோம். ஒரு சின்ன விஷயம் நம் கண் முன்னே நடந்தால் கூட, அதனை பெரியதாக கருதி அதிகமாக யோசித்து, இல்லாத ஒரு சோகத்தை நாமே உருவாக்கி விடுவோம். இது நமக்கு பதற்ற உணர்வை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் கூட்டும் செயலாக இருக்கும். இதனை எப்படி நிறுத்துவது என்று பலருக்கு தெரியாது. இதை சமாளிக்க ஜப்பானியர்கள் சில ஸ்மார்ட்டான வழிகளை கண்டுபிடித்து வைத்துள்ளனர். அவை என்னென்ன தெரியுமா?

இலக்குகளை நிர்ணயித்தல்: 

இக்கிகை என்பது ஒரு ஜப்பானிய வாழ்வியல் முறையாகும். இதன்படி, நாம் மகிழ்ச்சியாக வாழ எது நமக்கு பிடித்திருக்கிறது, எதை நான் விரும்புகிறோம், இந்த உலகிற்கு என்ன தேவைப்படுகிறது, நமக்கு எதனால் வெகுமதி கிடைக்கிறது, நம் வாழ்வின் நோக்கம் எது என்பதை எழுதி வைக்க வேண்டும். இப்படி செய்து அதை அடிக்கடி படித்து வந்தால் நம்முடைய அதிகமாக யோசிக்கும் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மேலும், மன அமைதியும் கிடைக்கும். 

நிறைவற்றதை ஏற்றுக்கொள்ளுதல்: 

வாழ்வில் அனைத்துமே நமக்கு நிறைவான உணர்ச்சியை கொடுத்து விடாது என்பதை ஏற்றுக்கொள்ளும் தத்துவம் இது. இதை முழுமையாக தெரிந்து கொண்டால் நம் வாழ்வில் முழுமையற்றதாக, உடைந்து கிடக்கும் விஷயத்தை கூட முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும். வாழ்வு கணிக்க கூடியதாக இருப்பதில்லை என்பதையும் இது உணர்த்தும். இந்த ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், வாழ்க்கையை அழகாக கடந்து செல்லவும் உதவும்.

இயற்கையுடன் இணைதல்: 

நமது மனநிலை கொஞ்சம் தொய்வாக இருக்கும் நேரத்தில், “வெளியில் சென்று ஒரு வாக்கிங் போயிட்டு வா” என்று பிறர் கூறுவதை கேட்டிருப்போம். இதுவும் அதுபோன்ற ஒரு முறை தான். அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, இயற்கை எழில் சூழ்ந்த ஒரு இடத்திற்கு சென்று அங்கு இருக்கும் விஷயங்களை கவனிக்க வேண்டும். சுற்றி இருக்கும் ஒளி-ஒலிகள், வாசனை உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும். சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்தால், அதிகமாக யோசிப்பதை நாம் நிறுத்துவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கலாம். 

தியானம்: 

அதிகமாக யோசிக்கும் நேரத்தில் ஜப்பானியர்கள் Zazen என்ற ஒரு தியான முறையில் கடைபிடிக்கின்றனர். இதை செய்ய முதலில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு அப்படியே அமைதியாக உட்கார வேண்டும். பின்பு, மென்மையாக மூச்சை இழுத்து விட்டு என்ன யோசனை தோன்றினாலும் அதனை இப்படி யோசிக்க வேண்டும். இந்த முறையில் உங்கள் யோசனைகளுடன் நீங்கள் ஓட்டுக்கள் இல்லாமல் இருக்க முடியும். அதிகமாக இருப்பதை நிறுத்த இது ஒரு உபயோகரமான வழியாகும். 

சிறிய முன்னேற்றங்கள்: 

இந்த முறைக்கு, Kaizen என்று ஜப்பானியர்கள் பெயர் வைத்துள்ளனர். நாம் பொதுவாக அதிகமாக யோசிக்கும் போது, “அடுத்து என்ன?” என்ற கேள்வி நமக்குள் நிலவிக் கொண்டே இருக்கும். இதை தவிர்த்து “அடுத்து என்ன என்று தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, இப்போதைக்கு இந்த சிறிய மாற்றமும் போதுமானது” என்ற மனப்பக்குவத்தை, இந்த முறை மூலம் கொண்டுவர முடியும். இதனால் தினந்தோறும் வாழ் சிறு சிறு முன்னேற்றங்கள் ஏற்படும்.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் ஆக கொரியர்கள் குடிக்கும் மேஜிக் பானங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..

மேலும் படிக்க | நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க 10 கொரியன் வழிமுறைகளை பின்பற்றுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News