CAA, NRC-க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் CAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு !!

Last Updated : Feb 16, 2020, 10:42 AM IST
CAA, NRC-க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்! title=

தமிழகத்தில் CAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு !!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்று சட்டதிருத்தத்திற்க்கும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த போராட்டங்களை கண்காணிக்க  6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக TGP உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து TGP திரிபாதி பிறப்பித்த உத்தரவில்; குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனிக்கு பாஸ்கரன்,  தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கலுக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், CAA, NPR, NRC-க்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை சுமார் 50 நிமிடங்கள் நடந்தது. 

 

Trending News