18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நவ.,2 ஒத்திவைப்பு

Last Updated : Oct 9, 2017, 12:56 PM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நவ.,2 ஒத்திவைப்பு title=

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் வரும் 2 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கடந்த மாதம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. 

இதனையடுத்து சபாநாயகர் தனபால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

முன்னதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை விசாரணை இன்று காலை துவங்கியது. இன்று அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை முன்வைக்க வேண்டும் என நீதிபதி கூறியதை அடுத்து, அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகினர்.

இன்றைய விசாரணையின் போது சபாநாயகர், தினகரன், முதல்வர் ஆகியோர் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய 
23-ம் தேதி வரை அவகாசம் அளித்து நீதிபதி வழக்கை வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். மேலும் அதுவரை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது என்ற தடை தொடர்கிறது.

Trending News