தமிழகம் வந்துள்ள 15-வது நிதிக்குழு உறுப்பினர்களை இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்தார்!
2020-ம் ஆண்டு முதல் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் நிலையில், 15-வது நிதிக்குழுத் தலைவர் என்.கே.சிங் தலைமையிலான உறுப்பினர்கள், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அரசு மற்றும் அரசியல்கட்சிகளின் கருத்துகளை அக்குழு நேற்றைய தினம் கேட்டறிந்தது. அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தை தொடர்ந்து உள்ளாட்சி சிறப்பு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர்களிடம் 15-வது நிதிக்குழு உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டறிந்தனர்.
இன்று தலைமைச் செயலகத்தில், 15வது நிதிக்குழுமத்தினருடன், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு துணை முதல்வர், மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்ற 15-வது நிதிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/YLe3Bv8x8L
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 6, 2018
இந்நிலையில் இன்று என்.கே.சிங் தலைமையிலான நிதிக்குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னிர் செல்வம், நிதிக்குழு தலைவர் என்.கே.சிங், நிதிக் குழு உறுப்பினர்கள், தலைமை செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், டாக்டர் TV சோமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்!