ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த அக். 16ஆம் தேதி தொடங்கியது. இந்த சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் 'குரூப் - ஏ' பிரிவிலும், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் 'குரூப் - பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
'குரூப் - ஏ' பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், 'குரூப் - பி' பிரிவு அணிகளுக்கான கடைசி போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி, காலையில் நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், அயர்லாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அடுத்து சுற்றுக்கு அசத்தலாக முன்னேறியது.
கிரிக்கெட் வரலாற்றில், மேற்கு இந்திய தீவுகள் அணி முதன்முறையாக உலகக்கோப்பை தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
Zimbabwe and Ireland complete the teams in the Super 12 phase that begins tomorrow!
Check the updated groups here https://t.co/TYT0TxUrsg#T20WorldCup pic.twitter.com/W4vcuYjYOs
— T20 World Cup (@T20WorldCup) October 21, 2022
மேலும் படிக்க | T20 World Cup: வெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளிய அயர்லாந்து; உலக கோப்பையில் இருந்து அவுட்
இதையடுத்து, நடைபெற்ற ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 133 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், ஜிம்பாப்வே அணியின் கேப்டன் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோரின் அதிரடியால் ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளை பெற்றது. எனவே, ரன்ரேட் அடிப்படையில், ஜிம்பாப்வே அணி 'குரூப்-பி' பிரிவின் முதலிடத்தையும், அயர்லாந்து அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
12 teams, 1 winner
The Super 12 phase begins tomorrow at the #T20WorldCup after Zimbabwe and Ireland make it as the last two teams on Day 6 of the tournament!
Check the updated fixtures here https://t.co/VlX3uCYXxn pic.twitter.com/tuJENp6tf3
— ICC (@ICC) October 21, 2022
இதனால், சூப்பர் 12 சுற்றின் முதல் பிரிவில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன், 'குரூப்-ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இலங்கை அணியும், 'குரூப்-பி' பிரிவில் இரண்டாமிடத்தை பிடித்த அயர்லாந்து அணியும் இடம்பெற உள்ளன.
அடுத்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ள இரண்டாம் பிரிவில், 'குரூப்-ஏ'-வில் இரண்டாமிடத்தை பிடித்த நெதர்லாந்து அணியும், 'குரூப்-பி' பிரிவில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணியும் இடம்பெற உள்ளன.
மேலும் படிக்க | T20 world cup: ரிசர்வ் நாளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ