மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக WV ராமன் அறிவிப்பு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் வீரர் WV ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Dec 20, 2018, 07:30 PM IST
மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக WV ராமன் அறிவிப்பு! title=

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் வீரர் WV ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே கடும் மோதல் நிலவியது. சாதனைகள் பல படைத்த வீராங்கணை விளையாட வாய்ப்பில்லாமல் அறங்கிற்கு வெளியே அமரும் நிலை ஏற்பட்டது. 

போட்டி முடிவுற்ற நிலையில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதியோடு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அவரது பதவிகாலம் நீட்டிக்கப்படவில்லை. எனினும், மகளிர் அணி வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிந்து ஒரு தரப்பு ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பு புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இதற்கிடையே புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை BCCI கோரியது. இதற்காக கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட். மூத்த வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட மூவர் தேர்வுக்குழு நியமிக்கப்பட்டது.

மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிரிஸ்டன், ஹெர்ஸ்செல் கிப்ஸ், ரமேஷ் பவார், டபிள்யு வி.ராமன், மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத், டிரென்ட் ஜான்சன், மார்க் கோல்ஸ், டமிட்ரி மஸ்காரனெஸ், பிராட் ஹாக் உள்பட 28 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. இறுதியில் WV ராமன், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிறிஸ்டன் ஆகிய மூன்று பேரை இறுதிச்சுற்றுக்குப் பரிந்துரை செய்ததுது மூவர் தேர்வுக்குழு. 

இதையடுத்து இந்திய மகளிர் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பெயரை BCCI இன்று மாலை அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வூக்கரி வெங்கட் ராமன் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார்.

தற்போது, பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளராக இருக்கும் இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 11 டெஸ்ட், 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இடது கை மட்டையாளரான இவர் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் விளையாடியுள்ளார்.

Trending News