IPL 2023: ரிஷப் பந்திற்கு பதிலாக டெல்லி அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் வீரர் யார்?

Delhi Capitals New Captain: டெல்லி அணியின் கேப்டன்சி பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 5 பேரில் ஒருவருக்கு தான் சான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 3, 2023, 03:27 PM IST
  • ரிஷப் பந்த் காயங்கள் குணமடைய ஆறு மாதங்களாவது ஆகும்.
  • டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடைக்கால கேப்டன் தேவை.
  • டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
IPL 2023: ரிஷப் பந்திற்கு பதிலாக டெல்லி அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் வீரர் யார்? title=

Delhi IPL Captain: இந்திய விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், முகத்தில் ரத்த காயங்களுடன் பலத்த காயம் அடைந்த நிலையில், உத்தரகண்ட் தலைநகர் ரேடாடூன் மேக்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர்.

அதேநேரத்தில் அவர் மீண்டும் எப்போதும் கிரிக்கெட் வீளையாடுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குணமடைய குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரிஷப் பந்த் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2023 தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் யார்?
அதுமட்டுமில்லாமல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருக்கும் அவர், இந்தமுறை அவர் ஐபிஎல் 2023 தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால், அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஒரு அணியில் வீரருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில், அவருக்கு மாற்று வீரர் அணியில் இருப்பார்கள். அதன் அடிப்படையில் விக்கெட் கீப்பரை பொறுத்தவரை இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட் அணியில் உள்ளார்.

மேலும் படிக்க: ஓய்வு தரவில்லை: ரிஷப் பந்த் குடும்பத்தினர் வைக்கும் குற்றசாட்டு!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?
ஆனால் கேப்டன்சி பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தான் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஐபிஎல் 2023 தொடர் அல்லது குறைந்தபட்சம் முதல் பாதி போட்டி வரை ரிஷப் பண்ட் இல்லாததால், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடைக்கால கேப்டன் தேவை. எனவே டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரரான டேவிட் வார்னர் கேப்டனாக அனுபவம் உள்ளதால், தலைமைப் பொறுப்பை ஏற்கலாம். மணீஷ் பாண்டே மற்றொரு தேர்வாக இருக்கலாம். ஆனால் அவர் சமீபத்தில் அணியில் சேர்ந்ததால் அது சாத்தியமில்லை. எதுவாக இருந்தாலும் போட்டி ஆரம்பிக்கும் வரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் யார் என்பதை வெளிப்படுத்தாது. 

ப்ரித்வி ஷா, மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வருவதற்கு முன்பு கேப்டனாக இருந்த அனுபவம் பெற்றவர்கள். டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை வெற்றிகரமாக வழிநடத்தி இருப்பதால், கேப்டன் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். ஐபிஎல் 2023 இல் ரிஷப் பண்ட் பங்கேற்கவில்லை என்றால், நீண்ட காலத்திற்குப் பிறகு வார்னர் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்கலாம்

மேலும் படிக்க: IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ள சில வீரர்களை குறித்து பார்ப்போம்:

டேவிட் வார்னர்
ஐபிஎல் 2023ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் பதிலாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு குறிப்பிடத்தக்க ஐபிஎல் அனுபவம் உள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2016ல் ஐபிஎல் கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்தார்.

பிருத்வி ஷா
ஐபிஎல் 2023ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்தும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ள மற்றொரு வீரர் இந்திய U-19 அணியின் முன்னாள் கேப்டன் ப்ரித்வி ஷா. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்தார். விஜய் ஹசாரே டிராபியை வென்று 2021-22 சீசனில் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டிக்கு அவர்களை வழிநடத்தினார். 2018 ஆம் ஆண்டு U-19 அணியின் கேப்டனாக வழிநடத்தி உலகக் கோப்பையை வென்று தந்துள்ளார்.

மணீஷ் பாண்டே
ஐபிஎல் 2023 மினி ஏலத்தின் போது மணீஷ் பாண்டேவை டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.2.4 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் 2023 இல் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்க அவரும் ஒரு தேர்வாக இருக்கலாம்.

மிட்செல் மார்ஷ்
31 வயதான ஆல்-ரவுண்டர் மார்ஷ் ஆஸ்திரேலியா U-19 அணியை கேப்டனாக வழிநடத்தில் 2010 இல் பட்டம் வென்றார். அத்துடன் ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் அணிகளை வழிநடத்திய அனுபவத்தையும் கொண்டுள்ளார். எனவே ஐபிஎல் 2023 சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.

யாஷ் துல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய U-19 அணிக்கு யாஷ் துல் கேப்டனாக இருந்தார். இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்த நியமிக்கப்படலாம்,

மேலும் படிக்க: ரோஹித், விராட், சூர்யா ஐபிஎல் 2023ல் விளையாடுவது சந்தேகம்! பிசிசிஐ-ன் புது ரூட்!

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் விவரம்:
ரிஷப் பந்த் (கேட்ச்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் பட்டேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, , லுங்கி என்கிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், இஷாந்த் ஷர்மா, பில் சால்ட், முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News