கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆலோசகர் விரேந்திர சேவாக் அவர்கள், தான் IPL-லை காப்பாற்றிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டகாரர் மற்றும் IPL 2018 தொடரில் பஞ்சாப் அணியின் ஆலோகராக இருக்கும் விரேந்திர சேவாக் அவர்கள், கிறிஸ் கெயிலை தேர்ந்தெடுத்ததன் மூலம் IPL தொடரையே காப்பாற்றிவிட்டதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
IPL 2018 ஏலத்தின் போது கடைசி சுற்றில் ரூ.2 கோடிக்கு விலை வாங்கப்பட்டவர் கிறிஸ் கெயில். கடைசி வரை அவரை யாரும் ஏலத்தில் வாங்காத நிலையில் இறுதியாக பஞ்சாப் அணி அவரை விலைக்கு வாங்கியது.
எனினும் முதல் இரண்டுப் போட்டிகளில் அவர் பஞ்சாப் அணியின் விளையாடும் 11 போட்டியாளர்களில் இடம்பெறவில்லை, பின்னர் 3-வது போட்டியிலேயே இடைநிலை போட்டியாளராக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். வெறும் 33 பந்துகளில் 63 ரன்களை குவித்து ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் இழுத்தார்.
இதனையடுத்து கடந்த வியாழன் அன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் இவர் தனது முதல் சத்தினை பூர்த்தி செய்தார். வெறும் 63 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்நிலையில் நேற்று இதனை பாராட்டும் விதமாக, விரேந்திர சேவாக் கிறிஸ் கெயிலை தேர்ந்தெடுத்ததன் மூலம் IPL தொடரையே காப்பாற்றிவிட்டதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டார்.
I saved the IPL by picking - @henrygayle
— Virender Sehwag (@virendersehwag) April 19, 2018
— Chris Gayle (@henrygayle) April 19, 2018
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கெயிலும் தனது பக்கத்தினில் இதனை பதிவுசெய்தார். மேலும் "நான் இன்னும் என்னை நிறுபிக்க வேண்டும் என பலர் தெரிவிக்கின்றனர், அதனை செய்து வருகின்றேன் என்னும் நிம்மதி தற்போது உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.