இந்த அண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடையும் கட்டத்துக்கு வந்திருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகள் விளையாட வேண்டிய நிலையில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 13 போட்டிகளை கடந்துவிட்டன. இந்த நிலையில் அடுத்த சுற்றுக்கு போகும் 3 அணிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டன. டெல்லி, சென்னை, பெங்களூரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நான்காவது இடத்தை பிடிக்க கொல்கத்தா, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
இந்த நிலையில், விராத் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறது. விராட் கோலி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட பெங்களூரு ஏன் தீவிர பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
லீக் சுற்றை கடந்து வரும் நான்கு அணிகளுக்கு Qualifier 1, Eliminator, Qualifier 2 என மூன்று போட்டிகள் நடத்தப்படும். இதில் லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் qualifier 1 இல் மோதும். அதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் லீக் சுற்றில் மூன்றாம், நான்காம் இடத்தை பிடித்த அணிகள் முதலில் Eliminator போட்டியில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி Qualifier 2-வில் Qualifier 1 இல் தோற்ற அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றிபெறும் அணிதான் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
Prepping. @RCBTweets pic.twitter.com/Ef8yZ2fnC8
— Virat Kohli (@imVkohli) October 5, 2021
ALSO READ | ஐபிஎல் 2021: நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா செய்த சிறப்பு சாதனை
இந்த முறையில் லீக் சுற்றில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்ல இரண்டு வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் மூன்றாம் நான்காம் இடங்களை பிடிக்கும் அணிக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது. இதன் காரணமாகத் தான் தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்க ஆர்வம் காட்டுகிறது.
இன்று நடக்கும் லீக் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது பெங்களூரு அணி. இதில் வெற்றி பெற்றால் சென்னை அணியுடன் சமநிலை பெறும் பெங்களூரு. அதன்பின் பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு தங்களது புள்ளிகளை உயர்த்த தலா ஒரு ஆட்டம் மீதம் இருக்கிறது.
ALSO READ | RCB இன் அடுத்த கேப்டன் யார்? இந்த 3 வீரர்களுக்கு அதிக வாய்ப்பு