புதுடெல்லி: ஐபிஎல் (IPL 2020) போட்டித்தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. ஆனால் அன்று அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றார் சூப்பர் டூப்பர் எம்.எஸ் தோனியின் (MS Dhoni). அவருடைய தனிப் பாணியை வெளிப்படுத்திய ஷாட்களால் தனது திறமையை நிரூபித்தார் தோனி.
இந்த போட்டியின் 19வது ஓவரில் தோனி தொடர்ந்து மூன்று சிக்சர்களை அடித்தார். அந்த சிக்ஸர்களில் ஒன்று மிகவும் தொலைவுக்குச் சென்றது. பந்து, ராக்கெட்டைப் போல பறந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. ஆறு மீட்டர் நீளம் கொண்ட போட்டியின் மைதானத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது அந்த அதிவேகமாக வந்த பந்து மோதியது. காரின் அருகே நின்ற ஒருவர் அந்தப் பந்தை எடுத்துக் கொண்டார். இது அங்கிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கு மூலம் பகிர்ந்துள்ளது.
He's one lucky man.
Look who has the ball that was hit for a six by MS Dhoni.#Dream11IPL #RRvCSK pic.twitter.com/yg2g1VuLDG
— IndianPremierLeague (@IPL) September 22, 2020
இந்த போட்டியில், ராஜஸ்தான் அணி 216 ரன்கள் எடுத்தது. வெற்றியை நோக்கி மட்டை வீசிய தோனியின் சி.எஸ்.கேவுக்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் தோல்விக்குப் பிறகும் பெருமையாக பேசக்கூடிய அளவிற்கு தோனி இறுதி ஓவர்களில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்தார்.
இந்த போட்டியில் தோனி ஏழாவது வீரராக மட்டை வீச களம் இறங்கினார். வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்கும்போது சற்று அமைதி காத்த தோனியின் பேட், மும்பை அணி வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற நிலை உருவானபோது, இறுதியில் தனது மாயஜாலத்தைக் காட்டி, மூன்று சிக்ஸர்களை அடித்தது. இந்த ரன்களால் மும்பை இண்டியன்ஸ் அணியின் தோல்விக்கான ரன்களின் வித்தியாசம் குறைந்தது.
Also Read | முன்னாள் Australian cricketer Dean Jones மாரடைப்பால் காலமானார்!!