ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தின் பொது அப்போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கவைப்பது வழக்கம், ஆனால் வரும் இந்தியா எதிராக இலங்கை ODI தொடரில் இனி இந்த வழக்கம் தொடராது என தெரிகிறது.
இந்த ODI தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டது எனினும் அடுத்த போட்டிகளில் ஒலிக்காது எனவும் இது குறித்து மறுபரிசிலனை செய்யவதற்கான வாய்புகள் குறைவு எனவும் தெரிகிறது.
Pakobserver.com உடன் பேசியதில், "தேசிய கீதம் பாடலை ஒலிக்கவிடும் வழக்கம் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே செயல்படுத்வதை இலங்கை வழக்கமாக வைத்துள்ளது, எனவே அடுத்த போட்டிகளில் ஒலிக்வைக்க படாது" என இலங்கை கிரிக்கெட் அணியின் ஊடக முகாமையாளர் தினேஷ் ரத்னிசிங்கம் கூறியுள்ளார்.
மேலும் முன்னதாக, முதல் தடவையாக (ஞாயிற்றுக்கிழமை தம்புள்ளையில்) தேசிய கீதம் பாடலை ஒலிக்க வைத்ததை தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் வரவிருக்கும் T-20 (செப்டம்பர் 6) போட்டியில் தேசிய கீதம் பாடலை ஒலிக்க விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.