World Cup 2023: மேடையில் தூங்கிய டெம்பா பவுமா... கிண்டல் பண்ணாதீங்க - காரணம் இதுதான்

ICC World Cup 2023: 2023 உலகக் கோப்பை தொடருக்கான கேப்டன்கள் சந்திப்பு இன்று நடந்த நிலையில், அந்நிகழ்வின் மேடையில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தூங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 4, 2023, 05:59 PM IST
  • கேப்டன்கள் சந்திப்பு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.
  • பிற அணிகளின் கேப்டன்களிடம் பெரிதாக கேள்விகள் எழுப்பப்படவேயில்லை.
  • இணையத்தில் சில ரசிகர்கள் பவுமாவை கேலி செய்தனர்.
World Cup 2023: மேடையில் தூங்கிய டெம்பா பவுமா... கிண்டல் பண்ணாதீங்க - காரணம் இதுதான் title=

ICC World Cup 2023: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் நாளை முதல் அடுத்த 45 நாள்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

கேப்டன்கள் சந்திப்பு

உலகக் கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று தொடக்க விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சிகள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில் இந்தியா - பாகிஸ்தான் பேட்டிக்கு முன்னரோ அல்லது இறுதிப்போட்டிக்கு முன்னரோ திட்டமிடப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிகிறது. 

மேலும், கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், உலகக் கோப்பைக்கு முன் வழக்கமாக நடக்கும் கேப்டன்களுக்கு இடையேயான சந்திப்பு இன்று மதியம் 2.30 மணியளவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், ரவி சாஸ்திரி 10 அணிகளின் கேப்டன்களையும் மேடைக்கு வரவேற்றார். தொடர்ந்து, கடந்த உலகக் கோப்பையை வென்ற இயான் மார்கனும் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

மேலும் படிக்க |  இந்தியா - ஆஸ்திரேலியா: பிளேயிங் லெவனில் இவருக்கு வாய்ப்பு இல்லை! 11 பேர் விவரம்

மேடையில் கண் அயர்ந்த பவுமா

தொடர்ந்து, 10 அணிகளின் கேப்டன்களிடமும் ரவி சாஸ்திரி மற்றும் இயான் மார்கன் மாறி மாறி பல்வேறுகளை கேள்விகளை கேட்டனர். இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி குழந்தைகள் சிலரும் கேப்டன்களிடம் சில கேள்விகளை எழுப்பினர். அதன்பின், செய்தியாளர்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலோனார் பாபர் அசாம், ரோஹித் சர்மாவிடமே அதிக கேள்விகளை கேட்டனர். பிற அணிகளின் கேப்டன்களிடம் பெரிதாக கேள்விகள் எழுப்பப்படவேயில்லை. zeenews.india.com/tamil/photo-gallery/know-the-captains-of-10-teams-participating-icc-cricket-world-cup-2023-466491

அதில் ஒரு கட்டத்தில் பரந்த அளவில் கேள்விகளை கேட்குமாறு ரவி சாஸ்திரியும் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை வைத்தார். இருப்பினும், சில கேப்டகன்ளிடம் மட்டுமே பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அந்த வேளையில், மேடையில் அமர்ந்திருந்த டெம்பா பவுமா சற்று கண் அயர்ந்ததாக தெரிகிறது. மேடையில் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, இருக்கையில் அமர்ந்தவாறே தூங்குவது போன்று இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. அவரிடமே பலரும் கேள்விகளை எழுப்பாத நிலையில், அவர் மிக மிக நிதானமாக மேடையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் சொந்த ஊர் திரும்பிய பவுமா

முன்னதாக, சில தனிப்பட்ட மற்றும் குடும்ப காரணங்களுக்காக அவர் இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு விமானம் மூலம் சென்றிருந்தார். அவரது அணி புது டெல்லியில் தங்கள் முதல் ஆட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, கேப்டன்கள் சந்திப்பு நிகழ்விற்காக பவுமா அகமதாபாத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

இணையத்தில் சில ரசிகர்கள் பவுமாவை கேலி செய்தபோது, ​​சிலர் பவுமாவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரவித்து, அவர் சமீபகாலமாக மேற்கொண்ட பயணத்தைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றனர். பயிற்சி அமர்வுகள் மற்றும் பயிற்சி ஆட்டங்களின்போது பவுமா அவரது அணியுடன் இணைந்திருக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த பிறகு பவுமா ஏன் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது என்பது குறித்து தனிப்பட்ட குடும்ப காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  ப்ளீஸ் கேட்காதீங்க...என்னால உதவ முடியாது - விராட் கோலி கோரிக்கை.. மனைவி அனுஷ்காவின் ரிப்ளை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News