போட்டி ட்ராவில் முடிந்தது, ஆனா தொடரை வென்றது இந்தியா தான்...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற வரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக ட்ரா ஆனதாக அறிவிக்கப்பட்டது!

Last Updated : Jan 7, 2019, 09:30 AM IST
போட்டி ட்ராவில் முடிந்தது, ஆனா தொடரை வென்றது இந்தியா தான்... title=

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற வரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக ட்ரா ஆனதாக அறிவிக்கப்பட்டது!

மோசமான வானிலை காரணமாக 5-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி ட்ராவில் முடிந்ததாக அறிவிகப்பட்டது. இதனையடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இறுதி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 3., துவங்கி நடைப்பெற்று வந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. துவக்க வீரராக களமிறங்கிய KL ராகுல் 9(6) ரன்களுக்கு வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 77(112) ரன்கள் குவித்தார். 

முதல் விக்கெடுக்கு களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா நிதானமாக விளையாடி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 18-வது சதத்தினை பூர்த்தி செய்தார். புஜாராவினை தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பன்ட் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 159(189) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 167.2-வது பந்தில் இந்திய அணி தனது 7 வது விக்கெட்டை இழக்க 622 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்துவர 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாலோ ஆனை தவிற்க முடியாமல் இரண்டாம் இன்னிங்சை தொடந்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸி அணி தரப்பில் மார்கஸ் 79(120) ரன்கள் குவித்தார். இந்திய வீரர்கள் தரப்பில், குல்தீப் யாதவ் 5 விக்கெட், ஜடேஜா மற்றும் மொகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை குவித்தனர்.

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்த ஆஸி., 4 ஓவர்கள் விளையாடிய நிலையில், மோசமான வெளிச்சம் காரணமாக 4-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் குவித்திருந்தது. உஸ்மான் 4(12), மார்கஸ் 2(12) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து இன்று காலை 5-ஆம் நாள் ஆட்டம் துவங்கும் என எதிர்பாரக்கப்பட்டது, ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் துவங்குவது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 5-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாகவம், ஆட்டம் வெற்றி தோல்வி இல்லாமல் ட்ராவில் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்ட நாயாகனாகவும், தொடரின் நாயகனாகவும் புஜாரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Trending News