ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்காவை இலங்கை போலீசார் காவலில் வைத்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
2018-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமாகி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 25 வயதான மதுஷங்கா, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் இரண்டு வாரங்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பன்னாலா நகரில் காவலில் எடுக்கப்பட்டுள்ள அவர் இரண்டு கிராம் ஹெராயின் வைத்திருந்ததின் பேரில் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவின் போது மதுஷங்கா மற்றொரு நபருடன் காரில் சென்றுகொண்டு இருந்தபோது காவல்துறை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு, விசாரணையில் ஹெராயின் வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
வலது கை வேகப்பந்து வீச்சாளர் 2018 ஜனவரியில் தனது ஒருநாள் சர்வதேச அரங்கேற்றத்தில் பங்களாதேஷுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீத்தினார்.
2018-ஆம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார், ஆனால் காயங்கள் காரணமாக சர்வதேச அளவில் விளையாடவில்லை.
இலங்கை, செவ்வாய்க்கிழமை முதல் தனது ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது, எனினும் மார்ச் 20-ஆம் தேதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதற்காக கிட்டத்தட்ட 65,000 பேரை காவல்துறை இதுவரை கைது செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது.