புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?

ஷ்ரேயஸ் ஐயர், விஹாரி தங்களது வாய்ப்பிற்க்காக காத்திருக்கும் நிலையில், மிடில்-ஆர்டர்  மாற்றம் குறித்து பிசிசிஐ முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Jan 2, 2022, 05:36 PM IST
  • ஒரு அணியில் 3, 4 மற்றும் 5 ஆகிய பேட்டிங் வரிசைகள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
  • தற்போது இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி என இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? title=

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.  இதுவரை  எந்த ஆசிய அணியும் செஞ்சுரியன் மைதானத்தில் செய்யாத சாதனையை இந்திய அணி நிகழ்த்தி உள்ளது.  விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.  முத்த இன்னிங்சிஸில் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இடையேயான 117 ரன் பார்ட்னெர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.  மூன்றாம் நாள் காலையில் இந்திய அணியின் பேட்டிங் சரிந்தாலும், முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் பெரிதும் உதவியது.  

ALSO READ | டிகாக் முதல் டுபிளெசிஸ் வரை: 2021ல் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்கள்!

ஒரு அணியில் 3, 4 மற்றும் 5 ஆகிய பேட்டிங் வரிசைகள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.  ஆனால் சமீப காலமாக இந்தியாவிற்குச் இது சிறப்பாகச் செயல்படவில்லை. புஜாரா, கோஹ்லி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் ரன்கள் அடிக்க தடுமாறி வருகின்றனர்.  கேப்டனாக கோலி சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.  சரியாக விளையாடாமல் இருப்பதால் ரஹானேவிடம் இருந்த துணை கேப்டன் பொறுப்பு கே.எல். ராகுலுக்கு கொடுக்கப்பட்டது.   தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்படும் போது புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் அணியில் இடம் பெறுவார்களா என்ற சந்தேகமும் எழும்பியது.   இருப்பினும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.   இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

rahane

தற்போது இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி என இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.  உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்திற்கு எதிராக ஐயர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பாக விளையாடினார்.  விஹாரி கடைசியாக ஒரு வருடத்திற்கு முன்பு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.  புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் கோஹ்லிக்கு களத்தில் முக்கிய ஆலோசனைகள் வழங்க முடியும், ஏனெனில் அவர்கள் இதற்கு முன்பு அணியில் இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்துள்ளனர்.  விஹாரி மற்றும் ஐயர் இவ்வாறான யோசனைகளை வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே.  ரஹானே இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தியுள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் புஜாராவிற்கு இது நான்காவது டெஸ்ட் சுற்றுப்பயணம் ஆகும்.  

iyear

புஜாரா மற்றும் ரஹானே இருவரும் தங்கள் இடங்களை தக்கவைக்க தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் குறிப்பிடத்தக்க ஸ்கோர்களை அடிக்க வேண்டும்.  புஜாரா மற்றும் ரஹானே வலுவான லெவன் அணியில் இடம் பெறத் தகுதியானவர்களா அல்லது புது முக வீரர்களுக்கு வழி விடும் நேரம் இதுதானா என்பதை இந்திய தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் தொடரை வெல்வது ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.   கோஹ்லியிடம் இருந்து ஒருநாள் போட்டித் கேப்டன் பதவியை பறித்ததன் மூலம் குழு ஏற்கனவே தைரியமான அழைப்பை எடுத்துள்ளது.  தற்போது மற்றொரு பெரிய முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. 

ALSO READ | Cricket: வெற்றிபெற்ற இந்திய அணிக்கு ஒரு புள்ளி குறைப்பு..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News