Sarfaraz Khan BCCI: அடுத்த மாதம் நடைபெற உள்ள மேற்கு இந்திய தீவுகளுக்கா டெஸ்ட் தொடரில், இந்திய வீரர் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பல்வேறு தரப்பினரிடம் இருந்து கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்தியா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
கடந்த முறை நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், இம்முறை ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது. இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை தொடர்ந்து, குறைந்தபட்சம் டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் சில கடுமையான மாற்றங்கள் ஏற்படும் என்று ரசிகர்கள், வல்லுநர்கள் எதிர்பார்த்தனர்.
சர்ஃபராஸ் கான் சர்ச்சை
காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு பதில் உள்நாட்டி கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வரும் சர்ஃபராஸ் கானுக்கு மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணியிஸ் அறிமுகமாவார் என கூறப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக, வழக்கமான வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். பிசிசிஐ மூலம் மத்திய ஒப்பந்தத்தை கூட பெறாத அஜிங்க்யா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் வருத்தமடைந்த ரசிகர்கள், பிசிசிஐ தேர்வுகுழுவின் அளவுகோல் மற்றும் சில வீரர்களுக்கான ஆதரவு என சமூக ஊடகங்களில் கடுமையான சாடினர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிற்கும் அணி அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிசிசிஐ அதிகாரி ஒருவர் இறுதியாக, அடுத்தடுத்த ரஞ்சி சீசன்களில் ரன்களை குவித்த போதிலும், தேர்வுக்குழு சர்ஃபராஸ் கானை டெஸ்ட் தொடரில் ஏன் எடுக்கவில்லை என்பது குறித்து கருத்து தெரிவித்தார்.
என்ன காரணம்?
"அணி தேர்வு மீதான கோபமான எதிர்வினைகள் புரிந்துகொள்ளக்கூடியவை, ஆனால் சர்ஃபராஸ் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் ஒரு கிரிக்கெட் திறன் என்பதால் அல்ல. அவர் கருத்தில் கொள்ளப்படாததற்குப் பல காரணங்கள் உள்ளன என்பதை என்னால் ஓரளவு உறுதியாகச் சொல்ல முடியும்" என்று பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார். அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத தேர்வுக்குழுவில் உள்ள அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இத்தகைய கருத்தை தெரிவித்தார்.
கடந்த மூன்று ரஞ்சி சீசன்களில் சர்ஃபராஸ் கான் 37 ஆட்டங்களில் 2,566 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 79.65 ஆகும். உள்ளூர் கிரிக்கெட் அடிப்படையில் ஜாம்பவான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் சர்ஃபராஸ் உள்ளார். அவரது ஆன்-பீல்டு திறனை பற்றி அறிந்திருந்தும், தேர்வாளர்கள் அவரை தொடர்ந்து புறக்கணித்தனர். மேலும் பெயரிடப்படாத பிசிசிஐ அதிகாரி, அடுத்தடுத்த சீசன்களில் 900-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த ஒருவரை எடுக்க தெரியாத அளவிற்கு நாங்கள் முட்டாள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் முட்டாள்கள் அல்ல
"தொடர்ந்து சீசன்களில் 900க்கு மேல் ரன் குவித்த வீரரைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கும் அளவிற்கு தேர்வாளர்கள் முட்டாள்களா? சர்வதேச தரத்தில் சரியாக இல்லாத அவரது உடற்தகுதி ஒரு காரணம். அவர் அதில் கடினமாக உழைக்க வேண்டும், எடையைக் குறைத்து மீண்டும் மெலிந்தவராக மாறவேண்டும். தேர்வுக்கான ஒரே அளவுகோல் பேட்டிங் ஃபிட்னஸ் மட்டுமல்ல.
ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவரது நடத்தை சரியாக இல்லை. சில விஷயங்கள் சொன்னது, சில சைகைகள் மற்றும் சில சம்பவங்கள் கவனிக்கப்பட்டன. இன்னும் கொஞ்சம் ஒழுக்கமான அணுகுமுறை அவருக்கு நல்ல திறப்பை தரும். நம்பிக்கையுடன், சர்ஃபராஸ் தனது தந்தை மற்றும் பயிற்சியாளர் நௌஷாத் கானுடன் சேர்ந்து அந்த அம்சங்களில் பணியாற்றுவார்" என்று மூத்த அதிகாரி மேலும் கூறினார்.
என்ன நடந்தது?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஞ்சி ஆட்டத்தின் போது டெல்லிக்கு எதிராக சதமடித்த பிறகு சர்பராஸின் கொண்டாட்டம் மைதானத்திற்குள் இருந்த அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மாவை ஈர்க்கவில்லை. மேலும், ரஞ்சி கோப்பை 2022 இறுதிப் போட்டியின் போது, இடைவேளையின் போது அவரது நடத்தை மத்திய பிரதேச பயிற்சியாளரும், மும்பை மூத்த வீரர் சந்திரகாந்த் பண்டிட்டை வருத்தப்படுத்தியது.
சர்ஃபராஸின் கூடுதல் வேகத்தை சமாளிக்க இயலாமை மற்றும் அவரது சமீபத்திய ஐபிஎல் தொடரில் பார்மின்மை அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு எடுக்கப்படாததற்கு ஒரு காரணம் என்று பல வல்லுநர்களால் புரிந்துகொள்ளப்பட்டது உணரப்பட்டது" என அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.
கிரிக்கெட் திறன் மட்டுமல்ல
"மயங்க் அகர்வால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தபோது, ஒரே மாதத்தில் 1000 முதல் தர ரன்களை எடுத்தார். எம்எஸ்கே பிரசாத்தின் குழு அவரது ஐபிஎல் தகுதிச் சான்றுகளை சரிபார்த்ததா? உள்நாட்டு மற்றும் ஏ அணி வரிசையில் வந்த ஹனுமா விஹாரிக்கும் அதே தான் நடந்தது. அவர்களின் ஐபிஎல் மற்றும் வெள்ளை பந்து ரெக்கார்டு அப்போது எடுத்துக்கொள்ளப்படவில்லை. எஸ்.எஸ்.தாஸின் குழு இப்போது சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பது ஏன்? எளிமையானது. காரணம் கிரிக்கெட் திறன் சார்ந்தது மட்டும் அல்ல," என்று அவர் மேலும் கூறினார்.
கொஞ்சம் யோசியுங்கள்...
"சற்று யோசித்துப் பாருங்கள். சர்ஃபராஸ் ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இருப்புக்களில் கூட இல்லை? ருதுராஜ் திருமணம் காரணமாக வெளியேறிய பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தான் இரண்டு காத்திருப்பு வீரர்களாக அனுப்பப்பட்டனர்" என்றார்.
தற்போதைய நிலைமையின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து திரும்பும் வரை ருதுராஜ் அஜிங்க்யா ரஹானேவின் இடத்தை நிரப்ப பயன்படுவார். அதே நேரத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்டில் எதிர்கால டாப்-ஆர்டர் பேட்டராகக் கருதப்படுகிறார்.
மேலும் படிக்க | ஷிகர் தவானுக்கு அடித்த லக்! இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ