சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷசாங் மனோகர் இன்று ராஜினாமா செய்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தன்னுடைய பதவியிலிருந்து இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் கூறியதாவது:-
தனிப்பட்ட காரணங்களுக்காக மனோகர் ராஜினாமா செய்வதாகவும், அடுத்த தலைவர் நியமிக்கும் வரை தலைமைச் செயல் அதிகாரி கூடுதலாக தலைவர் பொறுப்பை கவனிப்பார் என சர்வதேச கிரிக்கெட் சங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 வருட பதவிக் காலம் உள்ள நிலையில் 8 மாதங்கள் மட்டுமே அவர் பதவி வகித்துள்ளார். மேலும் லோதா கமிட்டி குழுவுக்கு சரியான ஒத்துழைப்பு இவர் அளிக்கவில்லை என பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ICC confirms receipt of Shashank Manohar's resignation https://t.co/1uW4SrzOlx #cricket @icc
— ICC Media (@ICCMediaComms) March 15, 2017