வெள்ளிக்கிழமை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 2-வது ஒருநாள் போட்டியில் தொடரை உயிரோடு வைத்திருக்க இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது ரோகித் சில சாதனைகளை படைக்க காத்துள்ளார்!
இப்போட்டியில் ரோகித்துள்ளு கூடுதல் உந்துதல் கிடைத்தார், இந்திய தொடக்க ஆட்டக்காரர் மிக விரைவில் 9000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்ற மூன்றாவது வீரர் என அங்கிகரீக்கப்படுவார்.
ராஜ்கோட்டில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா வெறும் 46 ரன்கள் குவித்தால் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 9000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்றொர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடிப்பார்.
ரோகித் சர்மா இதுவரை 215 இன்னிங்ஸ்களில் 8954 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் அவருக்கு தேவையான ரன்கள் கிடைத்தால், 228 இன்னிங்ஸ்களில் 9000 ரன்கள் குவித்த கங்குலி, டெண்டுல்கர் (235 இன்னிங்ஸ்), பிரையன் லாரா (239 இன்னிங்ஸ்) ஆகியோரை அவர் இப்பட்டியலில் பின் தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக மிக வேகமாக 9000 ஒருநாள் ஓட்டங்களுக்கான சாதனை படைத்தோர் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலி (194 இன்னிங்ஸ்களில்) முதலிடத்தில் உள்ளார். இவரைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் 205 இன்னிங்சில் இந்த சாதனையினை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019-ல் ரோகித் சர்மா ஒரு அற்புதமான வெளிப்பாட்டினை காண்பித்துள்ளார். கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களை அடித்ததற்காக (உலகக் கோப்பையில் மட்டும் 5) அவருக்கு ICC ஒருநாள் வீரர் விருது அறிவித்தது. மேலும் ரோகித் 2019-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் சுட்டிக்காட்டப்பட்டார்.
இதனடையே இன்னும் 1 சதம் பதிவு செய்தார் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 வது வீரராக அடையாளம் காணப்படுவார். தற்போது வரை அவர் 28 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் இலங்களை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியாவுடன் இணைந்து 4-வது இடத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இந்த பட்டியலில் தற்போது 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முன்னிலை வகிக்கிறார், விராட் கோலி 70 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்ஸர்களை அடித்த முதல் வீரராக ரோகித் சர்மா பெயர் இடம்பெற அவருக்கு மேலும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவை.
இதேப்போன்று விராட் மற்றும் ரோகித் சர்மா கூட்டணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 991 கூட்டு ரன்கள் எடுத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ரன்கள் கூட்டாண்மை முடிக்க அவர்களுக்கு 9 ரன்கள் தேவை. வெள்ளிக்கிழமை அவ்வாறு செய்தால், அவர்கள் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த 5-வது ஜோடியாக பெயரிடப்படுவர்.