அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிரான மோதலில் யுஸ்வேந்திர சாஹல் அணியில் இல்லாதது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர் 2021-ல் அணியில் இடம் பெறவில்லை. ஆனால் ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சாஹலை டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவைக்கவில்லை.
மேலும் படிக்க | ’பவர்பிளே கிங்’ புவனேஷ்வர் குமாருக்காக காத்திருக்கும் மற்றொரு ரெக்கார்டு
சாஹல் இல்லாததற்கான காரணத்தை மூத்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். போட்டியின் தொடக்கத்தில் சாஹல் மற்றும் ஹர்ஷல் படேலிடம் உங்கள் பந்துவீச்சு அணிக்கு ஏற்ற சூழ்நிலையில் இருந்தால் விளையாடுவீர்கள், இல்லை என்றால் உலகக் கோப்பையில் எந்த போட்டியிலும் களம் இறங்க மாட்டீர்கள் என்று தெரிவிக்கப்பட்டதாக கார்த்திக் கூறினார். “அணி நிர்வாகம் அவர்களிடம் விளக்கப்பட்டதால் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இருப்பினும், போட்டிகள் இடையில் எங்காவது வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இருவரும் கடுமையாக தயாராகினர். எனவே பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் இருந்து தெளிவு இருக்கும்போது, வாய்ப்பு கிடைக்காமல் போனால் வருத்தப்பட வேண்டாம்,'' என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர். முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரண்டாவது போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். 2வது டி20 போட்டியிலும் மழை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி தயாராகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ