ஐபிஎல் 2021ன் 45வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்குமே வெற்றி தேவைப்பட்ட நிலையில் இன்று மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த வெங்கடேஸ் ஐயர் மற்றும் திரிபாதி இணைந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். வெங்கடேஸ் ஐயர் 67 ரன்களிலும் திரிபாதி 34 ரன்களும் வெளியேறினர். அதன்பின் இறங்கிய நித்திஷ் ராணா 18 பந்துகளில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட 31 ரன்கள் விளாசினார். பின் களமிறங்கிய மோர்கன், தினேஷ் கார்த்திக் ரன்கள் அடிக்க தவறினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
சிறிது கடினமான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியின் ஓபனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. ஒருபுறம் ராகுலும், மறுபுறம் மயங்க் அகர்வாலும் பஞ்சாப் அணியின் பவுலர்களை அசர வைத்தனர். மயங்க் அகர்வால் 27 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 40 ரன்கள் அடித்து வெளியேறினார். அதன்பின் பூரான், மார்க்ரம், ஹூடா ரன்கள் அடிக்க தவறியதால் போட்டி மெல்ல பஞ்சாப் பக்கம் சாய்ந்தது. கடைசி இரண்டு ஒரு 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 19வது ஓவரில் மூன்றாவது பந்தில் ராகுல் மிட்விக்கெட்டில் திசையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின் மூன்றாம் நடுவர் அதனை நாட் அவுட் என அறிவித்தார்.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இருபதாவது ஓவரின் இரண்டாவது பந்தில் கேஎல் ராகுல் அவுட்டாக போட்டியில் டென்ஷன் அதிகமானது. 20வது ஒரு மூன்றாவது பந்தில் ஷாருக்கான் சிக்ஸ் அடிக்க இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது.
WHAT A WIN!
Yet another nail-biter as @PunjabKingsIPL pull off a 5 wicket win over #KKR in Dubai. #VIVOIPL #KKRvPBKS
Scorecard https://t.co/lUTQhNzjsM pic.twitter.com/3J2N1X6a4G
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
ALSO READ டி20 உலக கோப்பை 2021: எந்த அணியில் யார் யார் இடம் பெற்றுள்ளனர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR