INDvsAUS: மழையின் காரணமாக 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது!

Last Updated : Jan 7, 2019, 05:49 AM IST
INDvsAUS: மழையின் காரணமாக 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்... title=

05:50 07-01-2019

மழையின் காரணமாக 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்...

12:14 06-01-2019

மோசமான வெளிச்சம் காரணமாக 4-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 5-ஆம் நாள் ஆட்டம் நாளை காலை 10.00(உள்ளூர் நேரம்) துவங்கும்.

தற்போது : தற்போது : 4 ஓவர்கள் | 6 ரன்கள் | 0 விக்கெட்
களத்தில் : உஸ்மான் 4(12) | மார்கஸ் 2(12)
குறிப்பு : இந்தியாவின் ரன்களை விட ஆஸி., 316 ரன்கள் குறைவு.


10:45 06-01-2019

குறைந்த வெளிச்சம் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது : 4 ஓவர்கள் | 6 ரன்கள் | 0 விக்கெட்
களத்தில் : உஸ்மான் 4(12) | மார்கஸ் 2(12)
குறிப்பு : இந்தியாவின் ரன்களை விட ஆஸி., 316 ரன்கள் குறைவு.


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இறுதி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 3., துவங்கி நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. துவக்க வீரராக களமிறங்கிய KL ராகுல் 9(6) ரன்களுக்கு வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 77(112) ரன்கள் குவித்தார். 

முதல் விக்கெடுக்கு களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா நிதானமாக விளையாடி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 18-வது சதத்தினை பூர்த்தி செய்தார். புஜாராவினை தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பன்ட் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 159(189) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 167.2-வது பந்தில் இந்திய அணி தனது 7 வது விக்கெட்டை இழக்க 622 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்துவர 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாலோ ஆனை தவிற்க முடியாமல் இரண்டாம் இன்னிங்சை தொடந்து விளையாடி வருகிறது. ஆஸி அணி தரப்பில் மார்கஸ் 79(120) ரன்கள் குவித்தார். இந்திய வீரர்கள் தரப்பில், குல்தீப் யாதவ் 5 விக்கெட், ஜடேஜா மற்றும் மொகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை குவித்தனர்.

தற்போது இரண்டாம் இன்னிங்கை தொடர்ந்து விளையாடி வரும் ஆஸி., 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் குவித்துள்ளது. மார்கஸ் 0(6), உஸ்மான் 4(6) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!

Trending News