2023 ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி அறிவிக்கப்பட்டது. போட்டி தொடங்க 100 நாட்கள் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில்,அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 2023 அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் போட்டி, நவம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடையும்.
46 நாட்களுக்குள் நடைபெறும் மெகா நிகழ்வுக்கான அட்டவணையில் மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறும் போட்டியில், இறுதியில் வெற்றி பெறுவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
இந்த கேள்விக்கான பதில், பத்தில் ஒன்றாக இருக்கும். உங்கள் ஊகம் சரியா இல்லையா என்பது நவம்பர் 19ம் தேதியன்று தெரிந்துவிடும் என்றாலும், அந்த பத்து பேர் யார் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஐசிசி 2023 ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் அணிகளும் பத்து என்பதால் கேப்டன்களின் எண்ணிக்கையும் பத்து. கேன் வில்லியம்சன் முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வருவாரா என்ற கவலையும் அக்கறையும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.வீரர்களின் காயம், சிகிச்சை என பல காரணிகள், இறுதி நிமிடத்திலும் ஆட்டத்தில் பங்கேற்பவர்களின் பட்டியலில் மாறுதலை ஏற்படுத்திவிடும்.
இந்தப் போட்டியில், யார் விளையாடுவார்கள், யார் வெளியேறுவார்கள் என்பது, போட்டி நடக்கும்போது கூட மாறலாம் என்றாலும், இந்த பத்துப் பேரில் ஒருவர் வெற்றிகரமான கேப்டனாக உயரும் வாய்ப்புகளே அதிகமாக தென்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன்கள்
இந்தியாவின் ரோஹித் ஷர்மா முதல் பாகிஸ்தானின் பாபர் அசாம் வரையிலான 10 புதிய கேப்டன்களைப் பற்றிப் பார்ப்போம்.
ரோஹித் சர்மா - இந்தியா
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலிக்கு பதிலாக 2022 இல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
பாட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா
2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆரோன் பிஞ்சிற்குப் பதிலாக, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்,
டெம்பா பவுமா - தென்னாப்பிரிக்கா
2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் ஓய்வு பெற்றார். எனவே, அவருக்கு பதிலாக, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் டெம்பா பவுமா.
பாபர் அசாம் - பாகிஸ்தான்
பாகிஸ்தான் பேட்டர் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்பராஸ் அகமதுவுக்குப் பதிலாக, பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோஸ் பட்லர் - இங்கிலாந்து
இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் கேப்டன் ஜோஸ் பட்லர், 2019 உலகக் கோப்பை கேப்டனாக பணியாற்றிய இயான் மோர்கனுக்குப் பதிலாக மாற்றப்பட்டார்.
தமீம் இக்பால் - பங்களாதேஷ்
வங்கதேச கேப்டன் தமிம் இக்பால். கடந்த உலகக் கோப்பையில் கேப்டனாக பணியாற்றிய ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக வங்காள அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் தமிம் இக்பால்.
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி - ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, 2019ல் கேப்டனாக இருந்த முகமது நபிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
டாம் லாதம் - நியூசிலாந்து
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீளத் தவறினால், கிவி விக்கெட் கீப்பர் 2019 உலகக் கோப்பை ரன்னர்-அப்பை வழிநடத்த உள்ளார்.
தசுன் ஷனக - இலங்கை
இலங்கை அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான தசுன் ஷனகா. ஐசிசி உலகக் கோப்பை 2023 தகுதிச் சுற்றில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.கடந்த உலகக் கோப்பையில் இலங்கை அணி திமுத் கருணாரத்னே தலைமையில் களம் கண்டது.
கிரேக் எர்வின் - ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வின். ஜிம்பாப்வே 2019 உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு வரத் தவறியது, இந்த முறை கிரேக் எர்வின் தலைமையில் களம் காண்கிறது ஜிம்பாப்வே அணி.
மேலும் படிக்க | 2023 ODI உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்! நம்பிக்கைத் தரும் இந்திய ஆடுகளங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ