NZ vs ENG, Tim Southee Record: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் நகரில் உள்ள பாசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 435 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது.
முதல் நியூசி., வீரர்
இங்கிலாந்து சார்பில் ஹாரி ப்ரூக் 186 ரன்கள் எடுத்த நிலையில், நட்சத்திர வீரர் ஜோ ரூட் 153 ரன்களை குவித்தார். மாட் ஹென்ரி 4 விக்கெட்டுகளையும், மைக்கெல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம், டிம் சௌதி தனது 700ஆவது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். மேலும், 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அசத்திய ஆண்டர்சன்
மோசமான பந்துவீச்சை தொடர்ந்து, பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு, அதுவும் அதிர்ச்சிகரமாகவே அமைந்தது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இன்னும் 3 விக்கெட்டுகளே கையில் இருக்கும் நிலையில், அந்த அணி 297 ரன்கள் பின்தங்கியுள்ளனர்.
Rain brings an early end to Day 2 in Wellington. The score 138/7 with Tom Blundell (25*) and Tim Southee (23*) at the crease Catch up on the scores | https://t.co/i5aMjAngcf. #NZvENG pic.twitter.com/niIIJrIVvW
— BLACKCAPS (@BLACKCAPS) February 25, 2023
நியூசிலாந்து அணியில் டாம் பிளம்டல் 25 ரன்களுடனும், டிம் சௌதி 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், லீச் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். மழை காரணமாக இன்றைய ஆட்டம் பாதிலேயே முழுவதுமாக நடைபெறவில்லை.
தோனியை கடந்த டிம் சௌதி
டிம் சௌதி பந்துவீச்சில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி மைல்கல்லை கடந்த நிலையில், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தக்க சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, ஸ்டூவர் ப்ராட் வீசிய பந்தில், சௌதி சிக்ஸர் ஒன்றை அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 78ஆவது சிக்ஸரை (131 இன்னிங்ஸ்) பதிவு செய்துள்ளார்.
That is some hitting
Tim Southee now equals MS Dhoni for number of Test matchs with 78... #NZvENG pic.twitter.com/1qoa2odbMt
— Cricket on BT Sport (@btsportcricket) February 25, 2023
இதன்மூலம், இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டரான தோனியின் சிக்ஸர் சாதனையை (144 இன்னிங்ஸ்) சமன் செய்தார். தற்போது, சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் 15 வீரர்களின் பட்டியலில் சௌதி உள்ளார். இவர், இன்னும் ஆறு சிக்ஸர்களை அடித்தார் எனில், மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Virat Kohli: 'நான் எப்போதும் தோனியின் வலது கை தான்' - விராட் கோலி பெருமிதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ