விராட் கோலிக்கு இடமில்லை... கேப்டன்ஸியை தூக்கும் ரோஹித் - டி20 உலகக் கோப்பை பிளான் இதுதான்!

ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்தாண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அதில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 7, 2024, 05:14 PM IST
  • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் ஜன. 11ஆம் தேதி தொடங்குகிறது.
  • டி20 உலகக் கோப்பை அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • டி20 அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது.
விராட் கோலிக்கு இடமில்லை... கேப்டன்ஸியை தூக்கும் ரோஹித் - டி20 உலகக் கோப்பை பிளான் இதுதான்! title=

India National Cricket Team: இந்திய அணி இந்த 2024ஆம் ஆண்டை வெற்றியோடு தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்தது. தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என இந்தியா அதன் வெற்றி பயணத்தை தொடர தயாராக உள்ளது.

சிக்கலில் இந்திய அணி...

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடன் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என தெரிகிறது. ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் வழக்கமாக நடைபெறும். அதன்படி, ஐபிஎல் தொடர் நிறைவடைந்த உடனேயே அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் மீதுதான் அனைவரும் கவனமும் தற்போது குவிந்துள்ளது எனலாம். இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக ஆப்கானிஸ்தான் உடன் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்தான் விளையாட உள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தான் இந்த தொடருக்கான தனது அணியை அறிவித்திருக்கும் சூழலில், இந்தியாவும் விரைவில் தனது அணியை அறிவிக்கும் எனலாம். டி20-ஐ பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீண்ட நாள் ஓய்வில் உள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக பாதியில் வெளியேறிய பின்னர் அவர் விளையாடவே இல்லை எனலாம். எனவே, இந்திய டி20 அணியின் கேப்டன்ஸி மற்றும் ஆறாவது பந்துவீச்சாளர் ஆகிய இடங்கள் தற்போதும் கேள்விகுறியாகவே உள்ளது.

மேலும் படிக்க | IND vs AFG: இந்த வீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!

ரோஹித்திற்கும் மட்டுமே வாய்ப்பு?

இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் டி20 அணியில் இணைய பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் விராட், ரோஹித், கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி உள்ள இவர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது பிளேயிங் லெவனிலேயே சற்று குழப்பதை ஏற்படுத்தும் எனலாம். ராகுலும் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளது. 

சுப்மான் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ஜித்தேஷ் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங் என வலுவான பேட்டிங் ஆர்டர் இருப்பதால் ரோஹித், விராட், ராகுல் ஆகியோரை பொறுத்துவது கடினம். இவர்களில் யாராவது குறைந்தபட்சம் இரண்டு ஓவர்களை வீசுவார்கள் என்றாலாவது அவர்களை இணைக்க வாய்ப்புள்ளது.

கேப்டன்ஸியில் யார்?

ஹர்திக் பாண்டியாவின் காயத்தை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ்தான் கேப்டன்ஸி பொறுப்பை வகித்தார். ஆனால், அவர் அதிக அழுத்தம் வாய்ந்த டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவேதான், ஹர்திக் விளையாடாத பட்சத்தில் ரோஹித் சர்மாவுக்கு மட்டும் அணியில் இடம்பிடிக்க ஓரளவு வாய்ப்புள்ளது. ஆனால், டாப் ஆர்டர் பேட்டிங்கில் விராட் கோலிக்கோ அல்லது விக்கெட் கீப்பிங் பேட்டராக கேஎல் ராகுலுக்கோ வாய்ப்பே இல்லை எனலாம்.

ரோஹித்தை கேப்டனாக்குவது குறித்து இந்திய மூத்த வீரர் ஆகாஷ் சோப்ரா அவரின் யூ-ட்யூப் சேனிலேயே பேசியதாவது,"ஃபிட்னஸ் தொடர்பான பிரச்சனை இருப்பதால் ஹர்திக் கேப்டனாக இருக்க மாட்டார். அவர் தற்போது விளையாடவில்லை. உலகக் கோப்பையில் அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. நீங்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை, நேரடியாக அவர் ஐபிஎல் விளையாடுவீர்கள். அது அவருக்கு உகந்தது அல்ல.

இவர்களுக்கு வாய்ப்புகள் அரிது 

ரோஹித் சர்மா டி20 கேப்டனாக இருப்பார், 2024 டி20 உலகக் கோப்பைக்கு கேப்டனாகவும் இருப்பார் என நினைக்கிறேன். 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருந்தால், அவர் கேப்டனாக மாட்டார் என்றே சொல்லியிருப்பேன்" என்றார். இதன்மூலம், ரோஹித்தின் இடமே இன்னும் உறுதியாகாத நிலையில், விராட் மற்றும் கேஎல் ராகுலுக்கு வாய்ப்புகள் அரிதுதான். டி20 உலகக் கோப்பை ஒருபுறம் என்றால், ஆப்கானிஸ்தான் தொடரும், ஐபிஎல் தொடரும்தான் இந்திய அணியின் ஸ்குவாடை தீர்மானிக்கப் போகிறது என்பது நிதர்சனம்.

மேலும் படிக்க | பொதுவெளியில் சிகரெட் பிடித்த தோனி! இணையத்தில் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News