INDvsNZ: டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

Last Updated : Jan 23, 2019, 10:14 AM IST
INDvsNZ: டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்  தேர்வு! title=

10:12 AM 23-01-2019

37 ஓவர்கள் முடிந்த நிலையில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்து தவித்து வருகிறது நியூசிலாந்து அணி!....

தற்போது களத்தில் டிம் சொதி 2(8), போல்ட் 1(9) ரன்களுடன் போராடி வருகின்றனர்.


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, வரலாற்று வெற்றியை பதிவு செய்து பின்னர் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெய்ப்பர் மெலன்பார்க் பார்க் மைதானத்தில் நடைப்பெறும் இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வுசெய்துள்ளது. 

நியூசிலாந்து அணியை பொருத்த வரை, அவர்களது நாட்டில் அவர்கள் தான் கிங். அங்கு இருக்கும் மைதானங்கள் மற்ற அணி வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும், காற்று மிக வேகமாக வீசும். இதுபோன்ற சிரமங்களை மீறி, இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது என்பதை கடந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா நிரூபித்துள்ளது. எனவே நியூசிலாந்து தொடரிலும் விராட் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அதேபோல நியூசிலாந்து அணியும் தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. மேலும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று முழுபலத்துடன் உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் சவாலாக நியூசிலாந்து இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. 

Trending News