புது டெல்லி: இலங்கை பந்து வீச்சாளரான மதிஷா பதிரானாவின் (Matheesha Pathirana) பெயர் அவரது பந்துவீச்சு காரணமாக இணையத்தில் வைரலாகியது உங்களுக்கு நினைவிருக்கலாம். 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் இந்திய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் வீசிய பந்து மூலம் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.
மதிஷா பதிரா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக பந்து வீசியபோது 175 கி.மீ வேகத்தில் வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். இது ஒரு ஸ்பீடோமீட்டர் தவறு அல்லது ஒளிபரப்பாளரின் தவறாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டு வந்தாலும், அதுக்குறித்து ஐ.சி.சி யின் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
பரந்த பந்து
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும் போது மீது இந்த பந்தை அவருக்கு எதிராக பத்திரானா வீசினார். நான்காவது ஓவரின் இறுதி பந்தான இது, ஜெய்ஸ்வாலின் கால் பக்கத்தில் இருந்து வெளியேறியது. இதற்கிடையில், பந்தின் வேகம் டிவி திரையில் காட்டப்பட்டபோது, அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவைப் போன்ற ஒரு பந்துவீச்சு பாணியால் வெளிச்சத்திற்கு வந்த பதிரானா, கடந்த ஆண்டு செப்டம்பரில் டிரினிட்டி கல்லூரி கேண்டிக்காக தனது முதல் போட்டியில் வெறும் 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Did Matheesha Pathirana Clock 175 KMPH In U19 Cricket World Cup
Full News: https://t.co/NokzKkSZYg#U19WorldCup #INDvsSL pic.twitter.com/G6EQfI3LUF— विनय (@imvinay_09) January 20, 2020
யு 19 உலகக்கோப்பை: இந்தியா வெற்றியுடன் தொடங்குகிறது
இந்தியா 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இலங்கை அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்திய யு-19 அணி 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் அடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் வீரர் அக்தர் சாதனை:
2003 ல் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 161.3 கி.மீ வேகத்தில் பந்தை வீசிய பாகிஸ்தான் வீரர் ஷோயிப் அக்தர் பெயரில் இதுவரை மிக வேகமாக பந்தை வீசிய வீரர் என்ற சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.