IND vs AUS: இந்தியா 255 ரன்களுக்கு ஆல்-அவுட்; வெற்றி யாருக்கு?

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 14, 2020, 07:38 PM IST
IND vs AUS: இந்தியா 255 ரன்களுக்கு ஆல்-அவுட்; வெற்றி யாருக்கு? title=

17:15 14-01-2020
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஷிகர் தவன் (74) மற்றும் லோகேஷ் ராகுல் (47) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், இந்திய அணியால், இந்த ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் 20 ஓவரை வைத்து பார்த்தால், இந்திய அணி 300 ரகளை கடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. ஆஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தலா இரண்டு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

தற்போது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், அது இந்திய பந்து வீச்சாளர்கள் கையில் தான் உள்ளது. அவர்களுடன் இந்திய அணியின் பீல்டிங் நன்றாக இருக்க வேண்டும்.

 

 


15:58 14-01-2020
32.5 ஓவரில் ஐந்தாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. வெறும் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் அவுட் ஆனார்,


15:49 14-01-2020
அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி. 31.2 ஓவருக்கு நான்காவது விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா. அரை சதத்தை நெருங்கிய நிலையில் ராகுல் 47(61) ரன்னிலும், நன்றாக ஆடி வந்த தொடக்க வீரர் ஷிகர் தவான் 74(91) ரன்களிலும் அவுட் ஆனார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 161(4) ரன்னில் அவுட்.

தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் (wk) ஆடி வருகின்றனர்.


14:41 14-01-2020
இந்திய அணி 15 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 10(15) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அவுட் செய்தார்.

 


01:57 PM 14-Jan-20

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 10(15) ரன்களுக்கு வெளியேறினார். ரோகித்தை தொடர்ந்து கே.எல் ராகுல் களமிறங்கி விளையாடி வருகின்றார்.


மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் ஆடி வருகின்றனர்.

 

 

 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது. 

Trending News