கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற IPL லீக் 6-வது போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
IPL 2019 தொடரின் 6-வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலிதில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து கொல்கத்தா அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் லெயன் 10(10), சுனில் நரேன் 24(9) ரன்களில் வெளியேறினர், எனினும் இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராபில் உத்தப்பா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 67(50) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக நிதிஷ் ராணா 63(34), ஆன்டிரிவ் ரூஸ்வெல் 48(17) ரன்கள் குவித்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஆண்ட்ரூஸ் விஜிலியோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
பஞ்சாப் அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் 1(5), கிறிஸ் கெயில் 20(13) ரன்களுடன் வெளியேறிய நிலையில் இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மயங்க் அகர்வால் 58(34), ஷர்பான் கான் 13(13) குவித்து வெளியேறினர். இறுதியாக களமிறங்கிய டேவிட் மில்லர் 59*(40), மந்தீப் சிங் 33*(15) ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தனர். எனினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே குவித்த பஞ்சாப் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.