ஒரு தசாப்தத்திற்கு பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதன்முறையாக கோப்பையை வென்றபோது அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை மைதானத்திற்கு அழைத்து கவுரவித்தது. மேலும், அந்த அணியில் அப்போதைய கேப்டனாக இருந்த ஷேன் வார்னேவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. போட்டிக்கு முன்பாக ஷேன் வார்னே குறித்த நினைவுகளை ஜோஸ் பட்லரும் பகிர்ந்து கொண்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022 கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பட்லர் இந்த ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்த சதங்கள் மற்றும் அரைசதங்கள் என விளாசிய அவர், ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலியும், இரண்டாம் இடத்தில் டேவிட் வார்னரும் இருந்தனர். ஆனால், 849 ரன்கள் விளாசிய பட்லர் வார்னரைக் கடந்து 2ஆம் இடத்துக்கு முன்னேறினார்.
இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று ஷேன் வார்னேவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் நினைத்திருந்தனர். கேப்டன் சஞ்சு சாம்சனும் டாஸ் நிகழ்வின்போது இதனை தெரிவித்தார். ஆனால், குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் காரணமாக அவர்களின் எண்ணம் கைகூடவில்லை. இறுதிப்போட்டிக்கு முன்பாக ஜோஸ் பட்லர் பேசும்போது, வார்னர் எங்களை பார்த்துக் கொண்டிருப்பார். எங்களின் ஆட்டத்தை பார்த்து நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.
மேலும் படிக்க | பட்லரை 2ஆவது கணவராக ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் வீரரின் மனைவி
இந்த நேரத்தில் அவர் எங்களுடன் இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறும்போது பட்லரின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதனை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் அணியின் முதல் கேப்டனாக ஷேன் வார்னே, அந்த அணிக்கு முதல் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR